ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவர் இஸ்ரேல் இராணுவம்
25 Nov,2023
ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் என இஸ்ரேல் படை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெள்ளியன்று இரவு இஸ்ரேல் படைத்துறை பேச்சார் டானியர்ஹகாரி தெரிவிக்கையில்,
ஹமாஸ் அமைப்பின் தலைமைகள் காசாவிலும் உலகம் முழுவதும் பின்தொடரப்படுகிறார்கள் என்று கூறினார்.
ஹகாரியின் எச்சரிக்கை கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹமாஸ் தலைமைக்கு இஸ்ரேல் படை அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பின்தொடரும் என்று சமிக்ஞை செய்கிறது.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை ஒழிப்பதற்கான பல புகழ்பெற்ற இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு இது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.