நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து குமரியைச் சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்: கேரளாவில்
24 Nov,2023
கேரள மாநிலத்துக்கு காதலனுடன் சென்ற குமரியைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி 2 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனால், காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த காதல் ஜோடி சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பருத்தியூர் என்னும் இடத்தில் ஆறு ஒன்று கடலில் கலக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர். காதலன் தன்னுடன் துணைக்கு பக்கத்து ஊரை சேர்ந்த நண்பனையும் அழைத்து சென்றிருந்தார்.
இரவு நேரம் வரை 3 பேரும் அங்கு பொழுதைக் கழித்தனர். அப்போது, காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, நண்பர் தனியார் தொலைவில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த 2 பேர், காதலனையும், அவரது நண்பரையும் தாக்கியதோடு, இருவரையும் நிர்வாணமாக்கியுள்ளனர். தொடர்ந்து காதலியையும் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக 2 பேரும் பலாத்காரம் செய்து உள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சக நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில் அந்த கும்பல் 2 பேரையும் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளன. காதலனையும் அவரது நண்பரையும் தாக்கும் போது, எங்களை அடிக்காதீர்கள் என்று வாலிபர்கள் அழுகின்றனர். இளம்பெண்ணை வீடியோ எடுக்கும் போது, அந்த பெண் தனது கையால் முகத்தை மூடுவதும், வலுக்கட்டாயமாக கையை நீக்குவதும் பதிவாகி உள்ளது.
காதலனுடன் சென்ற காதலியை 2 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.