பாத்திரம் கழுவாம இருந்தா அபராதம்.. புது ரூல் பிறப்பித்த சீன அரசு!
24 Nov,2023
சீன அரசின் புதிய கட்டுப்பாடுகள் சீன அரசின் புதிய கட்டுப்பாடுகள்
.சீனாவில் வீடு அழுக்காக இருந்தாலோ பாதிரங்கள் அழுக்காக இருந்தாலோ பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசாங்கம், மக்களிடம் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பழக்கத்தை கொண்டு வர சில கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமையல் பாத்திரங்களை கழுவாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.116 அபராதம் விதிக்கிறது. படுக்கையை ஒழுங்காக மடித்து வைக்காதவர்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை நன்றாக சுத்தம் செய்யாதவர்களுக்கும் இதே அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.
அதேபோல் தரையில் சம்மனமிட்டு உட்கார்ந்து சாப்பிட்டால் ரூ.233 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வீட்டில் எங்காவது சிலந்தி வலைகள் இருந்தால் அதை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை செய்யாதப்பட்சத்தில் ரூ.58 அபராதமாகும். வீட்டு முற்றத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தால் ரூ.35 அபராதம். நிலைமையின் தீவிரத்தன்மையை பொறுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
வாழும் சூழலை அதிகப்படுத்தும் நோக்கில் 14 வகையான நடத்தைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தவறுகளை செய்தால் அபராத தொகை இரட்டிப்பாகும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கை முடிவு குறித்து சீனாவின் முக்கிய பத்திரிகைகளுக்கு நவம்பர் மாதம் 14-ம் தேதி இந்தக் கிராமத்தின் துணை தலைவர் பேட்டி அளித்துள்ளார். புதிய அபராத தொகை குறித்த விவரங்கள் இன்னும் முழுமையடையவில்லை. அசுத்தம், குளறுபடி, ஒழுங்கற்ற வாழ்க்கைச் சூழல் போன்றவை பல காலமாக நீடித்து வருகின்றன. இதையெல்லாம் களையும் பொறுட்டே இப்படியொரு அபராதம் விதிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்றீர்கள் என்றால், அங்கு பார்க்கும் எல்லாமே அசுத்தமாக இருக்கின்றன.
வீடு முழுவதும் சிலந்தி வலைகள். எங்குப் பார்த்தாலும் அருவருப்பும் குழப்பமும் நீடிக்கிறது. மக்கள் எந்த கவலையுமின்றி தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் வீட்டின் அருகே கொசுக்கள் நிறைய காணப்படுகின்றன. மிக அருகாமையில் நாய்களோடு வாழ்கிறார்கள் எனக் கூறி வேதனைப்படுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அபராத திட்டம், இந்தப் பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துவிடுமா என உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அபராதம் கட்ட வேண்டியிருக்குமே என்று பயந்தாவது இனி இந்த தவறை மறுபடியும் செய்ய மாட்டார்கள். இந்த மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை அனைத்துமே இவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற மறுபடியும் இவர்களிடமே முதலீடு செய்யவுள்ளது அரசாங்கம். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்யாமல் அபராதம் கட்டுபவர்களுக்கு துடைப்பம் வங்கிக் கொடுப்போம் எனக் கூறுகிறார் கிராம துணை தலைவர்.