காசாவில் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது – அவுஸ்திரேலியா மாணவர்கள்
23 Nov,2023
காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுமக்களை நோக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றிய மாணவர் ஒருவர் காசாமீதான இஸ்ரேலின்; ஆக்கிரமிப்பும் குண்டுவீச்சும் படுகொலை என தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெறுவது பெரும் அநீதி என்பதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 14000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது இனப்படுகொலை ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்பதை தெரிவிக்கவே நாங்கள் பாடசாலைகளில் இருந்து வெளியே வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு மாணவன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து கண்ணீருடன் உரையாற்றியுள்ளதுடன் காசா மோதலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார்.