நேந்திரம்பழ– தேங்காய் சாக்லெட்
20 Nov,2023
தேவையானவை:
உரித்த நேந்திரப்பழத்தைப் பிசைந்த விழுது – 4 கப்,
பால் 2 கப்,
தேங்காய் துருவல் – 2 கப்,
உருக்கிய நெய் – 1 கப்,
சர்க்கரை,
தண்ணீர் – 1ண கப்,
வெனிலா எசென்ஸ் – சிறிதளவு.
செய்முறை:
தேங்காயை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் 1ண கப் விட்டு சர்க்கரையை கொட்டி பாகுக் காய்ச்சவும். பாலில் 1 கப் தண்ணீர் சேர்த்து பாகில் கலக்கவும். நேந்திரம்பழ விழுது, நெய், தேங்காய் துருவல் ஆகியவற்றை அடுப்பிலிருக்கும் பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாக வரும் சமயத்தில் வெனிலா எசென்ஸை சேர்த்து கலக்கி, ஓர் அகலமான தட்டில் நெய் தடவி, சாக்லெட் கலவையை கொட்டி சற்று ஆறியவுடன் சிறு சிறு வில்லைகளாக போடவும். இதுவே ‘நேந்திரம்பழம்