மியா பழ அல்வா
20 Nov,2023
தேவையானவை:
சேமியா – 1 கோப்பை,
சர்க்கரை – த கப்,
பால் – 2 கப்,
அன்னாசி (அ) சாத்துக்குடி சாறு ண கப்,
வாழைப்பழம் – 2,
கேசரிப் பவுடர் – 2 சிட்டிகை,
நெய் – 100 கிராம்,
அலங்காரத்துக்கு ஆப்பிள் (அ) கறுப்பு திராட்சை.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரும், 2 கப் பாலும் சேர்த்து அடுப்பில் வைத்து, பால் கொதிக்கும் போது சேமியாவை அதில் போட்டுக் கிளறவும். சேமியா த பாகம் வெந்ததும் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கி மசித்து சேமியாவில் போட்டு சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் வெந்து குழைந்து அல்வா பதத்துக்கு வந்ததும் ஏலப்பொடி, கேசரிப்பவுடர் கொஞ்சம் பாலில் கலந்து தூவி நன்றாக கிளறவும்.பிறகு அதில் பழச்சாறு, நெய் ஊற்றி சிறு தீயில் கைவிடாமல் கிளறவும். பின் அல்வா பதம் வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி சேமியா கலவையை பரவலாகத் தட்டில் கொட்டவும். ஆப்பிள் பழத்தை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாகக் கட்டி செய்து (அ) துருவி மேலே அலங்காரமாக வைக்கவும். இக்கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து துண்டுகளாக போட்டுப் பரிமாறலாம். இது ஒரு வித்தியாசமான பழ அல்வா