நல்லி எலும்பு மசாலா
20 Nov,2023
மசாலாவிற்கு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
மல்லி விதைகள் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 6-7
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 7 பல்
துருவிய தேங்காய் – 1/2 கப்
கிரேவிக்குஸ
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
தக்காளி – 2 (நறுக்கியது)
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லி எலும்பு – 1/2 கிலோ
எலுமிச்சை – 1
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.பின் அதில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.அதன் பின் கசகசாலை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.பின்பு துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.அதன் பின்பு மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, சில நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.அதன் பின் நல்லி எலும்பை கழுவிப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 20-25 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.இறுதியாக மேலே எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், சுவையான நல்லி எலும்பு மசாலா தயார்.