கம்பளி யானை மீண்டும் பூமிக்கு வருமா?
20 Nov,2023
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக (Extinct species) கருதப்படும் கம்பளி யானை என்ற விலங்கு இனத்தை மீண்டும் பூமியில் உற்பத்தி செய்வதற்கான வேலைப்பாடுகளை ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கம்பளி யானை (woolly mammoth ) என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வாழ்ந்து வந்த பெரும் விலங்கு இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இவ்விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.