பாம்பு கறி பீட்சா சாப்பிட்டிருக்கீங்களா? .
13 Nov,2023
என்னது பாம்பு கறியா என நீங்கள் அதிர்ச்சியடைவது எங்களுக்கும் புரிகிறது. நூறாண்டு பழமையான இந்த ஹாங்காங் ரெஸ்டாரெண்டோடு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீட்ஸா ஹோட்டல் கை கோர்த்துள்ளது.
.
வழக்கமாக நாம் சாப்பிடும் பீட்சாக்களில் இறைச்சிகளும், காய்கறிகளும், சீஸ், காளான் போன்றவையும் சேர்க்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் பைனாப்பிள் பழத்தைக் கூட சேர்த்திருப்பார்கள். அதுவே நமக்கு வித்தியாசமாக தெரியும். ஆனால் அதையும்விட விசித்திரமான பீட்சா ஒன்று ஹாங்காங்கில் உள்ள ரெஸ்டாரெண்டில் கிடைக்கிறது. பீட்சா சுவை குறித்து நீங்கள் என்னவெல்லாம் நினைத்துள்ளீர்களோ, அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் பாம்பு கறி சேர்க்கப்பட்ட பீட்சாவை இவர்கள் தயார் செய்கிறார்கள்.
.
என்னது பாம்பு கறியா என நீங்கள் அதிர்ச்சியடைவது எங்களுக்கும் புரிகிறது. நூறாண்டு பழமையான இந்த ஹாங்காங் ரெஸ்டாரெண்டோடு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீட்சா ஹோட்டல் கை கோர்த்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து, பாம்பு கறி, கருப்பு காளான் மற்றும் சீனாவின் உலர வைக்கப்பட்ட பன்றி இறைச்சி ஆகியவை சேர்த்த பீட்சாவை தயாரித்துள்ளார்கள். இதை வெறும் பீட்சா என்று சொல்ல முடியாது; இதுவொரு சமையல் சாகசம் என்றே பலரும் ஆன்லைனில் கூறி வருகிறார்கள்.
.
பாம்பு கறி என்று சொன்னால் நமக்கு வேண்டுமானால் அறுவருப்பாக இருக்கலாம். ஆனால் ஹாங்காங் மக்களுக்கு அதுவும் ஒரு சாதாரன உணவுதான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பாம்பு சூப் ஹாங்காங்கிலும் தெற்கு சீனாவிலும் மிகவும் பிரபலமான உணவாகும். குளிர்காலத்தில் பலரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இறைச்சிகள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட பல வகையான பாம்பு சூப்கள் இங்கு கிடைக்கின்றன. .
.
பாம்பு கறியில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் இதை சாப்பிடுவதால் நம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைப்பதோடு நம் உடலும் வெதுவெதுப்பாகிறது எனக் கூறபடுகிறது. வியட்நாம், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளில் பாம்பு கறி பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சமைப்பதற்காகவே பாம்புகளை வீட்டில் வளர்ப்பவர்களும் இங்குண்டு.
.
பாம்பு கறியோடு கோழி துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பீட்ஸாவின் சுவை கூடுகிறது. பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ள இந்த பீட்சாவை சாப்பிடுவதால் ரத்தம் ஓட்டம் அதிகரிப்பதாக இந்த ரெஸ்டாரெண்ட் கூறுகிறது. மத்திய ஹாங்காங்கில் 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெஸ்டாரெண்டில் பல தனித்துவமான உணவுகள் உள்ளன. மேலும் களிமண் பானைகளில் அரிசி உணவோடு சேர்த்து பாதுகாத்து வைக்கப்படும் சாசேஜ்களைக் கொண்டும் இவர்கள் பீட்சா செய்கிறார்கள்.
.
இதுபோல் வித்தியாசமான சுவை கொண்ட பீட்சாக்கள் செய்யப்படுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு கூட, தைவான் நாட்டைச் சேர்ந்த பீட்சா கடை ஒன்று துரியன் பழம், பன்றி ரத்தம், தயிர் மற்றும் முட்டைகள் சேர்கப்பட்ட பீட்சா ஒன்றை தயார் செய்திருந்தது. இதற்கிடையில் 9 இன்ச் அளவு கொண்ட பாம்பு கறி பீட்ஸாவை வழக்கமாக தொட்டுக்கொள்ள பயன்படுத்தபடும் தக்காளி சாசிற்குப் பதிலாக, இந்த முறை மீன் சாஸை தொட்டுச் சாப்பிடுங்கள். சாப்பிட்டு பார்த்துவிட்டு மறக்காமல் சுவை எப்படியிருந்தது என்பதையும் கூறுங்கள்.
.