கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த இலங்கைத் தமிழர்கள்!
12 Nov,2023
.
கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த கொள்ளைச்சம்பவம் அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் காணொளியும் வெளியாகியுள்ளது.
.
குறித்த கொள்ளை சம்பவம் ஸ்டீல்ஸ் ஏவ் அருகே மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டிக்குள் வெள்லிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
.
இதன் போது பிளாசாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தமிழர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
,
இதன் போது சந்தேக நபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இதே வேளை வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்த இலங்கை தமிழ் இளைஞர்களை பலரும் பாராடி வருகின்றனர்.