சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், கணவன் மனைவி என கூறி பிறந்தநாள் பார்ட்டி செய்ய போவதாக 8 தம்பதிகள் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்துள்ளனர். நீச்சல் குளத்தோடு சேர்ந்த பண்ணை வீட்டினை சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். சனிக்கிழமை கணவன் மனைவி என கூறிக் கொண்டு எட்டு தம்பதிகளும், அவர்களுடன் சிங்கில்ஸ் 10 பேரும் வந்துள்ளனர். சனிக்கிழமை இரவு பண்ணை வீட்டு பார்ட்டி ஹாலில் அதிக சத்தத்துடன் பாடல்களை இசைக்கவிட்டு அரை நிர்வாண ஆடைகளுடன் ஆண்களும் பெண்களுமாக குத்தாட்டம் போட்டுள்ளனர். நள்ளிரவு பார்ட்டியில் மது, கஞ்சா, ஹூக்கா என போதையில் மிதந்தபடி, ஆட்டம் போட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு பார்ட்டி முடிந்ததும் சிங்கிளாக வந்த 10 பேரும் சென்றுவிட்டனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்தாட்ட காட்சிகளை பிரத்யேக முகநூல் பக்கத்தில் பதிவிட்ட மர்மநபர், ஞாயிற்றுக்கிழமையும் பார்ட்டி நடைபெற இருப்பதாகவும் பங்கேற்க விரும்பும் சிங்கிள்ஸ் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி அழைப்பு விடுத்துள்ளார். மது, பெண்கள், கஞ்சா உள்ளிட்டவற்றுக்கு தகுந்தாற் போல் ஒரு நபருக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பார்வைக்கு சென்றுள்ளது. உடனே காவல்துறையினருக்கு வாக்கிடாக்கி மூலம் அலர்ட் கொடுக்க, போலீசார் பனையூர் பண்ணை வீட்டிற்கு விரைந்தனர்.
கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பண்ணை வீட்டிற்குள் புகுந்து ரெய்டில் இறங்கினர். காக்கி உடையை பார்த்தும் ஒரு நிமிடம் ஆடி போன அவர்கள் அரை குறை ஆடையுடன் அறைகளுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். போலீசார் ரெய்டில் கையும் களவுமாக 8 பெண்களும், 15 ஆண்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களை பண்ணை வீட்டிலேயே வைத்து சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 45-வயதான செந்தில்குமார் என்பவர் இந்த இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி நள்ளிரவு மதுபோதை பார்ட்டிக்கு செந்தில் வேல் அழைப்பு விடுத்து வந்துள்ளார்.
அதில் real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கி Sex Enjoyment என்ற தலைப்பில் சிங்கில்ஸ்கு அழைப்பு விடுக்கும் வகையில் பல பெண்களின் போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். இதில் விருப்பம் உள்ள சிங்கில்ஸ் இன்பாக்ஸ் வரவும் என அதற்கு ஒரு தனி சமூக வலைத்தள ஐடி-யை கொடுத்துள்ளார். இந்த ஐ.டி-யை தொடர்பு கொண்டு பணத்தை கட்டும் சிங்கில்ஸ்களுக்கு, இடம், நேரம் போன்ற முழு தகவல்களும் வழங்கப்படும்.
போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க கணவன் மனைவி என்ற போர்வையில் 8 பேரை வேலைக்கு வைத்து பார்ட்டி ஹால் புக் செய்து சிங்கிள்ஸ்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட பெண்கள் வறுமையின் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த தொழிலுக்கு வந்து விட்டதாக கண்ணீர் விட்டுள்ளனர். 8 பெண்களையும் எச்சரித்து விடுவித்த போலீசார் செந்தில்குமார் உட்பட 8 ஆண்களை கைது செய்தனர்.
வீடுகளுக்கு தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபட வந்திருந்தவர்களை வீட்டிற்கு தெரியபடுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட 8 ஆண்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் வயாகரா மாத்திரைகள், மதுபாட்டில்கள், சிறிய அளவில் கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துனர். மேலும் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பர்த்டே பார்ட்டி என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கொடி கட்டி பறந்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.