பிறர் கொடுக்கும் தனிமையில்
நம்மை அறியலாம்
நாமாக எடுக்கும் தனிமையில்
உலகை ரசிக்கலாம்
(ரசிக்கின்றேன் உலகை)
கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ...!
சிந்தும்
மழை தூறலில்
சேர்ந்து
நனைந்த நினைவு
துளிகள்...!
மற்றவர்களைப்
பார்த்து பார்த்து
நீ அவர்களைப்
போல் வாழ்ந்தால்
உன்னைப் போல்
யார் வாழ்வது
ஆகவே நீ
நீயாகவே இரு...!
நிலவை
அழகாக்க
இருளை பூசிக்கொண்டது
இரவு...
பிறர்க்கு கொடுப்பதற்கு
எதுவும் இல்லை
எனில் கனிவான
வார்த்தைகளை பேசுங்கள்...
வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி...
விட்டுக் கொடுங்கள்
அல்லது
விட்டு விடுங்கள்
நிம்மதி நிலைக்கும்
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே
ரசிப்பதற்கு
ஏதேனுமொரு விஷயம்
தினமும் கிடைத்துக்
கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது
இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
கரையும் மெழுகில்
இருளை கடந்துவிடமுடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும்
இருக்கட்டும்
கற்றுக்கொடுப்பதில்
இலைகளுக்கும்
சிறு பங்குண்டு
வீழ்வது கூட அழகே
இலையுதிர் காலங்களில்
மரியாதை
வயதை பொறுத்து
வருவதில்லை
அவர்கள்
செய்யும் செயலை
பொறுத்து வருகிறது
இசைக்கு
நினைவுகளைத் தூண்டும்
சக்தியுண்டு
சில சமயம்
வலிக்குமளவிற்கு...!
நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது
எல்லா உறவுகளையும்
மேலோட்டமாகப் பார்த்தால்
மிகவும் அழகாகத்தான் இருக்கும்
ஆனால் அதன் ஆழத்தில்
ஒருவிதகட்டுப்பாடு
இருந்தே தீரும்
கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடுதொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடுஅடங்கும்
கொடுப்பவரை
ஏழை ஆக்காமல்
பெறுபவரை
செல்வந்தன் ஆக்கும்
ஒரே செயல்
புன்னகை மட்டுமே...!
வெளிப்படையாக சிரித்து
பேசுபவர்களுக்கு தான்
மனதில் வெளிக்காட்ட
முடியாத பல வேதனைகள்
மறைந்திருக்கும்...
உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்
நம்மை வெறுப்பேத்தவே
பலர் சிரிக்கின்றனர்
நாமும் சிரித்தேகடந்திடுவோம்...!
ஹேப்பி சண்டே உறவுகளே...!
பெரிய பெரிய
விசயங்களில் மட்டுமல்ல
சிறிய சின்னஞ்சிறிய
விசயங்களிலும் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது...!
எட்டி பிடிக்கும் தூரத்தில்
வெற்றியோ தோல்வியோ
இல்லை கற்பனையை தவிர
கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்
கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்
இவ்வளவுதான் வித்தியாசம்
குழந்தைப் பருவத்திற்கும்
தற்போதைய நிலைக்கும்...!
அறிவுரையினால்
புரிந்து கொள்பவரை விட
அனுபவத்திலிருந்து
தெரிந்து கொள்பவரே
அறிவாலும் மனதாலும்
பலசாலியாகிறான்...!
ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்க
செய்கின்றன குழந்தைகள்...!
என்னவிலை கொடுத்தாலும்
நாம் நினைக்கும்படி கிடைக்காது
(அனுபவங்கள்)
வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு
வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி
கூட கிடையாது
இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம் நீ
தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும்
எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாம்
எளிது தான்
மனமிருந்தால்
காலால் மிதித்த
தன்னை கையால்
எடுக்க வைக்கும்
பெருமை கொண்ட
முள்ளை போல
உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசும் வரை
உன் முயற்சியை
வடிவமைத்துக் கொள்
தடை
எவ்வளவுக்கு எவ்வளவு
பெரிதாயிருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு
அதை வெல்வதிலும்
பெருமையுண்டு
கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்
எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்
இருட்டில் இருந்துகொண்டு
விளைவுகளை பற்றி
சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க
முயற்சிசெய்
மூழ்கி விட்டாய்
என்று மற்றவர்கள்
எண்ணும் போது
முயற்சி கொண்டு
முத்தெடுத்து மேலேறி வாருங்கள்
கடலும் கை கொடுக்கும்
சாதிக்கும் துறைகள்
தான் வெவ்வேறே தவிர
சாதனை என்பது
எல்லா துறைகளிலும்
ஒன்று தான்
(கடின உழைப்பு)
வெற்றியே நிரந்தரமல்ல
எனும் போது
தோல்வி மட்டும்
என்ன விதிவிலக்கா
இ(எ)துவும் கடந்து போகும்
இன்றைய
அசமந்தபோக்கால்
நாளைய வெற்றிகள் கூட
தடைப்படலாம்
நாம மகிழ்ச்சியா இருந்தா
வாழ்க்கை நல்லா இருக்கும்
அதுவே
நம்மால் பிறரை மகிழ்ச்சியா
வைக்க முடிஞ்சா வாழ்க்கை
அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்
மகிழ்வித்து மகிழ்வோம்
நமது எண்ணங்கள்
மிகவும் வலிமையானது
அவற்றை
பூக்களைப் போல தூவினால்
அது நமக்கு
மாலையாகக் கிடைக்கும்
கற்களைப் போல எரிந்தால்
அது நமக்கு
காயங்களாகக் கிடைக்கும்
இதயத்தின்
துடிப்பை வைத்தே
குழந்தைகள்
கண்டுபிடித்து விடும்
தான் இருப்பது
அன்னையிடமா
அடுத்தவரிடமா
என்பதை
பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்
மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்
தொடவே முடியாத
தொலைவில் இருப்பதை
தொடுவானம் என்கின்றோம்
அருகில் இருக்கும்
வெற்றியை மட்டும்
தொலைவில் உள்ளது என்கின்றோம்
இழந்ததை
நினைத்து வருந்தாமல்
இனி இருக்கப் போவதை
நினைத்து நிம்மதியாய்
வாழத் தொடங்குங்கள்
யாரிடமும்
பேச வேண்டாம்
என மனநிலை
உருவாக காரணம்
அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்
நிலையில்லா
நீர்குமிழியல்ல நட்பு
அதன் உள்ளிருக்கும்
நிரந்தரமான காற்று
நம் வாழ்க்கை
நகர்ந்து கொண்டே
இருக்க வேண்டும்
ஒவ்வொருவரிடமும்
ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டு
கடந்து போறது தான் வாழ்க்கை
கவலைகளையும்
கஷ்டங்களையும்
அவமானங்களையும்
தோல்விகளையும்
தேவையில்லாத பழிகளையும்
துரோகங்களையும்
ஏமாற்றங்களையும்
கேலிப் பேச்சுக்களையும்
கடந்து போய் தான் வாழனும்
இதையெல்லாம் கடந்து போகாம
ஒரு வாழ்க்கையை வாழ முடியாது
மௌனம் மட்டுமல்ல
சில நேரங்களில்
தோல்விகளையும்
நேசிக்க அல்லது ஏற்றுக்கொள்ள
கற்றுக் கொண்டால்
வெற்றி நம்மை எந்நேரமும்
பற்றிக் கொள்ளும்
என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்தநினைவுகளை
மீட்டுத்தருவதில்லை
தொலைத்தலுக்கும்
தேடலுக்கும்
இடையில்
வெற்றிகரமாக
பயணிக்கிறது
வாழ்க்கை
எதிர் பாரத சந்திப்புகள் தான்
பல மறக்க முடியாத
நினைவுகளை தரும்
பாதுகாப்பு
அரணாய் நீயிருக்க
ஒவ்வொரு முறையும்
எனைத் தீண்ட முயன்று
ஏமாற்றத்திடனே செல்கிறது
மழை
(குடை)
நினைக்க தோன்றும்
கடந்த காலத்தின்
சில நினைவுகள் தான்
நம் வாழ்வின் வசந்த காலம்
உன்னை நேசிப்பவர்களுக்கு
விடையாய் இரு
உன்னை வெறுப்பவர்களுக்கு
கேள்விக் குறியாய் இரு
துணிவு
உங்கள் செயலை உயர்த்தும்
பணிவு
உங்களையே உயர்த்தும்
எப்போதாவது
கிடைப்பது வாய்ப்பு
அது எப்போதும்
கிடைப்பது வியப்பு
வாய்ப்பை வியப்பாய்
மாற்றலாம் விவேகமிருந்தால்
ஒவ்வொரு நாளும்
புதியதாய் மலர்வது
பூக்கள் மட்டுமல்ல
நம் மனங்களும் தான்
நல் எண்ணம் விதைப்போம்
நலமாக மகிழ்வாக வாழ்வோம்
சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனைகள் தேவையில்லை
வாழ்வில் தோல்விகளை சந்திக்க
துணிந்தவனுக்கு
தோல்விகளே இல்லை
உன் கனவுகளுக்கு
உயிரூட்டி பார்
உன் கனவும்
உயிர் பெரும்
நமக்கு வரும்
பிரச்சினைகளுக்கு தீர்வும்
நம்மிடமே தான்
தேட வேண்டும்
உற்சாகமான உறவுகளை
உங்களைச் சுற்றி
நிறைத்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கைப் பயணம் இனிதாகும்
வாழ்க்கைல நமக்காக
யாருமே இல்லைனு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தானு
நெனைச்சு செமயா வாழுங்க
நாளை என்ன செய்யலாமென
யோசிக்கலாம் ஆனால்
நாளை என்ன நடக்குமோ
என யோசிக்காதீர்கள்
நிம்மதி என்பதை கெடுத்து விடும்
மாற்றம் ஒன்றே மாறாதது
ஆனால் மாற்றமும் மாறுகிறது
ஏமாற்றமாக
நமக்கு தூக்கம் வரலைனா
நாம யாருடைய
கனவுலயோ
முழிச்சுகிட்டு இருக்கோம்னு
அர்த்தம்
வலித்தாலும்
கண்ணீர் சிந்திவிட்டு
அடுத்த நொடியே
அதை மறந்து சிரித்திடும்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
சமயங்களில்
மௌனத்தை உடைக்க
மௌனமே
சிறந்த வழியோ
மகிழ்ச்சியை சேமித்து
வைப்பதில்
எந்தப்பயனும் இல்லை
அவ்வப்போது
செலவிட்டு விட வேண்டும்
நம்மை
புரிந்து கொள்ள
மாட்டார்களா
என்ற ஏக்கம்
புரிந்து கொண்டபின்
நமக்கே ஏமாற்றத்தை தருகிறது
ஒரு நிஜத்தை சந்திக்க
பல நிழல்களை கடந்து
செல்ல வேண்டியிருக்கிறது
சூழ்நிலைகள் மாறும் போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
சிலரது வாழ்க்கையும் மாறும்
வார்த்தைகளில் கவனமும்
வாழ்க்கையில் நம்பிக்கையும்
இருப்பின்
சிறப்பான வாழ்வு நமதானது
நாட்களும்
நேரங்களும்
கடந்து போகும் போது
மீதம் இருப்பது
நாம் மட்டுமே
மற்றவர்களின் மனதைக்கவர
ஆடம்பரம் தேவையில்லை
கண்ணியமான உடையும்
மலர்ந்த புன்னகையுமே
போதுமானது
ஒவ்வொரு வாய்ப்பும்
எவ்வளவு முக்கியம்
என்பதை நமக்கு
புரிய வைக்கிறது
ஒவ்வொரு நிமிடமும்
நம்மளோட
சந்தோஷத்துக்காக
வாழ்ற ஒருத்தர்
உங்களுக்கு கிடைச்சிருந்தா
இந்த உலகத்திலேயே
நீங்க தான்
பெரிய அதிர்ஷ்டசாலி
எப்பேர்பட்ட
நம்பிக்கையும்
சிதைந்து போகும்
சந்தேகம் எனும்
சிறு தீப்பொறியால்
சுயநலம் என்னும்
குடைக்குள்
அனைவருமே
சூழ்நிலைக் கைதிகள்
தான்
எல்லா இடங்களிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா விசயத்திலும்
அறிவாளித்தனமாகவே
சிந்திக்கனும் என்பது
ஆகச் சிறந்த அறிவீனம்
நேரம் செல்ல செல்ல
நாட்கள் நகர நகர
வருடம் கடக்க கடக்க
வருந்தும் நினைவுகள்
யாவும் மறைந்து போகும்
மகிழ்வித்த தருணங்கள்
யாவும் ஏங்கும் சுவடுகளாகும்
பிடித்து விட்டால்
மறக்க தெரியாமல்
குழந்தை போல
அடம்பிடித்து நிற்பது தான்
மனிதனின் குணம்
இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவர்களை விட
நிழல் போல் கூட இருந்து
நட்பு என்ற பெயரில்
பலவீனம் படுத்திய
துரோகியிடம்
தோற்றவர்களே அதிகம்
உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்
விலகியவர்களுக்காக
மனம் வருந்தாதே
நம்முடன் இருக்க
அவர்களுக்கு தகுதி
இல்லை என்று
திமிராக கடந்து செல்
பொறுத்திருங்கள்
நீங்கள் செய்யும்
ஒவ்வொரு நல்ல (அல்லது தீய)
செயலுக்கும் அதற்கான
பிரதிபலன் கிடைத்தே தீரும்
பிழைகள்
உணராத வரை
எந்த மாற்றமும்
நிகழப் போவதில்லை
எதிலும்
தோல்வி என்ற வார்த்தையை
அழித்து விட்டு
அனுபவம் என்ற வார்த்தையை
எழுதி வையுங்கள்
தோல்வியில் துவளாமல்
அனுபவத்தில்
வெற்றி பெறுவோம்
எதிர்பாரா நேரத்தில்
வந்தவை
எதிர்பார்க்கும் போது
வருவதில்லை
ஒரு இலட்சியத்தை
அடைய வேண்டுமென்றால்
பல அலட்சியங்களை
கடந்து சென்றாக வேண்டும்
அகங்காரமில்லாது
பேசி பாருங்கள்
அகிலமும்
அமைதியாய் தெரியும்
ஆத்திரமில்லாது
யோசித்து பாருங்கள்
அனைத்தும்
நல்வழியாய் தெரியும்
எந்த தடைகளையும்
தகர்த்தெறிய
தெளிவான மனநிலை
இருந்தால் போதும்
நன்றாக பேசுபவர்கள்
எல்லாம்
நமக்கு நல்லதையே
செய்வார்கள் என்று
நம்பிக்கை கொள்ளாதே