ஹமாஸுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை.. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஏற்க முடியாது ,!
20 Oct,2023
,
வாஷிங்டன் : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் நேற்றுடன் 13வது நாளை எட்டி உள்ளது. இதுவரை இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 2,000 உயிர்களும், காசாவில் 4,000 உயிர்களும் பலியாகி உள்ளன. காசாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காசா சிட்டியின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள், பொதுமக்கள் என 800க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “இஸ்ரேல் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹமாஸ் போன்ற அமைப்புகள் வெற்றி அடைய விடமாட்டோம். ரஷ்ய அதிபர் புதின் போன்ற கொடுங்கோலர்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம்; இருவருமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது. உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்படும் நிதியளவு இந்த ஆண்டில் இருந்து அதிகப்படுத்தப்படும்.குறைந்தது 32 அமெரிக்கர்கள் உட்பட 1,300 பெருகும் அதிகமானோர் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர்.குழந்தைகள், வயதானவர்கள் உட்பட பலர் ஹமாஸ் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கை தொடரும்,”என்று தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் சென்றுவந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டு மக்களுக்காக இவ்வாறாக உரையாற்றியுள்ளார். இந்த உரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.