.
தாம்பத்திய உறவுகள் சலிப்பை உண்டு செய்யாமல் இருக்க முன் விளையாட்டுகள் அவசியம் என்கிறார்கள் பாலியல் சிகிச்சை நிபுணர்கள். இது குறித்து ஆண்களே பேச தயங்கும் நிலையில் இதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
.
பாலியல் வாழ்க்கை கணவன்மனைவி இருவருக்கும் ஆயுள் வரை முக்கியமானது. உடலுறவில் உச்சகட்டம் மட்டுமே சிறந்தது என்று நினைத்தால் அவர்களுக்கு முன் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இல்லை என்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் டி.காமராஜ். உடலுறவில் முன் விளையாட்டுகள் ஏன் முக்கியம், குறிப்பாக ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இவை செய்யும் நன்மைகள் என்ன என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.
உடலுறவில் முன் விளையாட்டு ஏன் அவசியம்?
.
உடலுறவில் முன் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். உடலுறவில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள் அல்ல. உதாரணத்துக்கு ஓட்டப்பந்தயத்தில் குழந்தையையும் வயதானவரையும் ஒன்றாக ஓட வைக்க முடியாது. இந்த விஷயத்தில் பெண்ணை அயர்ன் பாக்ஸ் உடன் ஒப்பிடலாம். அயர்ன் பாக்ஸ் மெதுவாக சூடேறும். இதற்கு நீண்ட நேரம் ஆகும். பிறகு ஸ்விட்ச் அணைத்தாலும் சூடு உடனே தணியாமல் பொறுமையாக அடங்கும். ஆணை லைட் உடன் ஒப்பிடலாம். ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிவது போன்று சொல்லலாம்.
.
ஆண்கள் உடலுறவில் உணர்ச்சி வந்தவுடன் விறைப்புத்தன்மை உண்டாகும். உடனே விந்து வெளியேறிவிடும். பிறகு அவர்களுக்கு உணர்ச்சி அடங்கிவிடும். ஆனால் பெண் இதற்கு தயாராக சிறிது நேரம் ஆகும். பெண் உடலளவிலும் மனதளவிலும் இதற்கு தயாராக வேண்டும். மேலும் பெண் உறுப்பில் திரவம் சுரக்க வேண்டும். இது பொறுமையாக நடக்கும் நிகழ்வு. இப்படி தயாராகமால் பெண் உடலுறவு கொள்ளும் போது பெண் உறுப்பு இறுக்கமாக இருக்கும். உடலுறவு வலியுடன் கடினமாக இருக்கும். அது மோசமான அனுபவமாக அப்பெண்ணுக்கு இருக்கும். இது உறவின் மீது வெறுப்பை உண்டு செய்யும்.
.
ஆண் உடலுறவின் போது இரண்டு நிமிடங்களில் விந்து வெளியேற்ற முடியும். இதனால் கருத்தரிப்பும் நிகழும். ஆனால் பெண் தாம்பத்திய உறவில் உச்சகட்டத்தை அடைய 14 நிமிடங்கள் வரை ஆகலாம். ஆண் போன்று 2 நிமிடங்கள் பெண்ணுக்கு போதாது. பாலியல் உறவில் பெண் உச்சகட்டம் அடைய போதுமான தூண்டுதல் இருக்க வேண்டும். பெண்ணின் கிளைட்டோரியஸ், ஜி ஸ்பாட், ஏ. ஸ்பாட், மார்பகம் போன்ற உறுப்புகளை தூண்டலாம். இதன் பிறகு உறவில் ஈடுபட்டால் உடலுறவு ஆண் பெண் இருவருக்கும் திருப்தியாக இருக்கும்.
.
ஆண்கள் உடலுறவு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். பெண் உச்சகட்டம் அடைவதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வது அவசியம். இல்லையெனில் தாம்பத்திய வாழ்க்கை என்பது உடலுறவு மட்டும் தான் என்று நினைத்துவிடுவார்கள். இதில் பாரம்பரியமான பழமையான நூலான வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரா நூலில் 1250 ஸ்லோகங்கள் உள்ளது. 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் பாலியல் உறவுக்கென தனி புத்தகம் கொடுத்தது நமது இந்தியா தான்.
இதில் பெண்ணின் ஆசையை தூண்டும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் தாம்பத்திய உறவில் உடலுறவை தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் உடலுறவுக்கு முன்பு விளையாடுவதை தனியாக foreplay என்றும் உடலுறவுக்கு பின்பு விளையாடுவதை afterplay என்று கூறுகிறார்கள். ஆனால் காமசூத்ராவில் இவை எல்லாமே உடலுறவாக தான் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பெண்ணின் உச்சகட்டத்தை தூண்டுவது முதன்மையாக சொல்லப்பட்டுள்ளது.
உறவின் போது ஆண் உச்சகட்டம் விரைவில் அடைந்துவிட முடியும் என்பதையும் பெண்ணுக்கு உச்சகட்டம் அடைவதற்கு நேர தாமதம் ஆகும் என்பதையும் ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்வது நல்லது. முன் விளையாட்டு இல்லாத தாம்பத்திய வாழ்க்கையை கொண்டுள்ள பெண்கள் நாளடைவில் உறவின் மீது வெறுப்பையும் சலிப்பையும் எதிர்கொள்ள வாய்ப்புண்டு. இதனால் தம்பதியருக்குள் வாழ்க்கையில் விரிசல் வரை உண்டு செய்துவிடலாம்.
இனிமையான தாம்பத்தியம் என்பது உடலும் மனமும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அன்பும் ஆயுள் வரை நிறைவாக இருக்கும். தாம்பத்தியம் குறித்து அறிய திருமணம் முன்பு மருத்துவரை சந்திப்பது. நல்ல பாலியல் புத்தகங்களை படிப்பது அவசியம்.