மருத்துவ மாணவி தற்கொலை! சிக்கிய கடிதம்! அவங்க 3 பேரும் தான்! அவரு பாலியல் ரீதியாக இப்படி செய்தாரு.!
07 Oct,2023
.
தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என்றும் ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.
தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் விடுதிக்கு சென்றுள்ளனர்.
.
அப்போது சுகிர்தா இருந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
.
அறுவைச் சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு அவரை அறையை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என்றும் ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.