மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!
07 Oct,2023
.
அப்பெண்டிசைடிஸ் என்றால் தீவிரமான வயிற்று வலி இருக்கும், ஆனால் ஜோஷ் வார்னருக்கு வயிற்று வலி இல்லை என கூறப்பட்டுள்ளது.
.
ஒரு சில நோய்களுக்கான அறிகுறிகள் மிகவும் பொதுவானவையாக இருக்கும். எனவே இந்த அறிகுறிகள் இந்த நோயைத்தான் குறிக்கின்றன என்று துல்லியமாக கண்டறிய மிகவும் கடினமாகத்தான் இருக்கும்! இருப்பினும், மருத்துவர்கள் இவ்வாறு தவறான டயக்னோஸ் செய்த காரணத்தால் ஒரு சிலருக்கு நோய் பாதிப்பு தீவிரமாக மாறியிருக்கின்றன, சிலர் இறந்தும் போயுள்ளனர் அப்படியொரு சம்பவம் சமீபத்தில் யூகேவில் நடந்திருக்கிறது. 25 வயதான ஒரு இளைஞர் மூளைக்கட்டியால் (brain tumor) பாதிக்கப்பட்டு இருக்கிறார்; ஆனால் அவருடைய நோயை மருத்துவர்கள் அப்பெண்டிசைடிஸ் என்று டயக்னோஸ் செய்துள்ளனர். தவறான இதனால் அவர் உயிரிழந்துள்ளார். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
.
தீவிரமான தலைவலி மற்றும் குமட்டல் உணர்வு போன்றவற்றால் அவதிப்பட்ட ஜோஷ் வார்னர் என்ற 25 வயது இளைஞர், யூகேவில் இருக்கும் டாரன் வேலி மருத்துவமனையில் ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். இவர் சுயமாக தச்சு வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக சென்ற இவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. மருத்துவர் இவருடைய அறிகுறிகளை கேட்ட பிறகு இவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் பிரச்னை இருக்கலாம் என்று கூறியதாக நியூயார்க் செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
.
அப்பெண்டிசைடிஸ் என்றால் தீவிரமான வயிற்று வலி இருக்கும், ஆனால் ஜோஷ் வார்னருக்கு வயிற்று வலி இல்லை. மருத்துவர்கள், வயிற்று வலி இல்லாத நிலையில் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது, பின்னர் அப்பெண்டிக்ஸ்சை நீக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வார்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்டிக்ஸ் நீக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை முடிந்த பின்பு, வார்னரின் உடல்நிலை மிகவும் மோசமானது. தொடர்ந்து மிகவும் அசௌகரியமான இருந்த நிலையில் வார்னர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு மற்றொரு சிடி ஸ்கேன் எடுப்பதற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ஒரு சில அசாதாரணமான மாற்றங்கள் தெரிந்ததாக அறிக்கைகள் கூறின. ஆனால் மருத்துவர்கள் அப்பொழுதுகூட அது கணினியில் ஏற்பட்ட பிழை காரணமாக இருக்கலாம் என்று முடிவு செய்து வார்னரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டனர்.
.
தீவிரமான தலைவலி காரணமாக வார்னர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சரியான சிகிச்சை பெற முயற்சி செய்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி அனுப்பி விட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் தாத்தா வீட்டில் இருக்கும் பாத்ரூமில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அருகிலிருக்கும் குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஸ்கேன் ரிப்போர்ட்டில் கிடைத்த விவரங்கள் டாரண்ட் வேலி மருத்துவமனையில் கிடைத்த விவரங்களுடன் வைத்து ஒப்பிட்டு பார்த்த போது, அவரது மூளையில் மிகப் பெரிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்துள்ளது. அந்த கட்டி மூளையின் வலது பக்கத்திலிருந்து மூளை நரம்பு வரை பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது.
மூளையில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, செப்டம்பர் 5 அன்று பயாப்சி செய்யப்பட்டது. வார்னருக்கு மெட்லைன் கிளியோமா என்ற மிகவும் தீவிரமான மூளை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள் வாழ்நாள் ஒருவருடத்திற்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மருத்துவர்கள் வார்னர் மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று தெரிவித்தனர். ஆனால் மூளை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட 12 நாட்களிலேயே வார்னர் இறந்துவிட்டார்.
இந்த தீவிரமான மூளை புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இறந்த வார்னரின் குடும்பம் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் முதலில் சரியாக நோயைக் கண்டறியாமல் விட்ட டேரன்ட் வேலி மருத்துவமனை மீதும் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.