காலையில் மணி ஆறு ஆகிவிட்டது. பொழுது விடிந்தது. வீடுகள் தோறும், வாசல்களில் தண்ணீர் தெளிக்கும் ஓசையும், பெண்களின் பேச்சுக் குரல்களும் கேட்டன.“ஆ ஆ”ஸ சோம்பல் முறித்தபடி, வாயைத் திறந்து கொட்டாவி விட்டபடி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான் ஜெகதீசன்.“என்னங்க, நேரமாகலையா?” என்றாள் மனைவி ஜனனி.எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு வந்த ஜெகதீசன் திண்ணைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித்தாளை புரட்டினான். சிறிது நேரம் கழித்து நேரத்தைப் பார்த்தான். மணி காலை ஏழரை ஆகிவிட்டதை உணர்ந்து குளிக்கச் சென்றான்.
பின்னர் உடை மாற்றிக் கொண்டு வந்து காலைச் சிற்றுண்டியை வாயில் விரைவாக அள்ளிப் போட்டு கொண்டு, சாப்பிட்டு முடித்தான். பின் சாப்பாட்டு பையை தோளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டான். வெளியே வந்து தலைக்கவசத்தை மாட்டிக் கொண்டு ஷூவை காலில் மாட்டிக் கொண்டு ஸ்கூட்டரை தள்ளியபடி அதில் ஏறி அமர்ந்து ஜனனிக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டுப் புறப்பட்டான். ஜெகதீசன் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினீயர். தனியார் கம்பெனியில் குழு மேலாளராக பணிபுரிந்து வந்தான். ஆண்டு ஊதியம் நாற்பத்தெட்டு லட்சம். மாத
ஊதியம் நான்கு லட்சமாகும். ஆனால் ஜெகதீசன் பணத்தின் அருமை தெரியாதவன்.
வங்கியில் கடன் வாங்கி, வீடு கட்டி, அதில் வசித்து வரும் அவன் மாதம் தோறும் முப்பதாயிரம் ரூபாய் வீட்டு கடனாகச் செலுத்தி வந்தான். வீட்டை அலங்கரிப்பதிலும், ஆடம்
பரப் பொருட்கள் பலவற்றை வாங்குவதிலும் ஆர்வம் உள்ளவனாக இருந்தான். தன் வருமானத்தில் சேமிப்பு எதையும் செய்யவில்லை.ஒருநாள் சோபாவில் அமர்ந்தபடி சிகரெட்டை பற்ற வைத்து, கரி என்ஜினை போல் ‘குப்குப்’ என்று புகையை வெளியே ஊதித் தள்ளியபடி இருந்தான். மனைவி ஜனனி வந்து எதிர்புற சோபாவில் அமர்ந்தபடி பேசத் தொடங்கினாள்.
“என்னங்கஸ”
“சொல்லு ஜனனி! என்ன விஷயம்ஸ”
“என் மனதில் பட்டதைச் சொல்றேன். கோபிச்சுக்க மாட்டீங்களே?”
“சரி சொல்லுஸ”“பதினைந்து வருடமாய் வேலை பாக்கிறீர்கள். நம்ம பையனுக்கு எட்டு
வயசாகுது, பெண்ணுக்கு ஐந்து வயசாகுதுஸ”“இப்போ அதுக்கென்ன?”
“ஏதாவது பணம் சேமித்து
வைத்திருக்கிறீர்களா?”
“இல்லைஸ”
“ஆடம்பரச் செலவு மட்டும் அதிகம் செய்றீங்க. நாளைக்கு பிள்ளைகள் பெரியவங்க ஆனா, மேல் படிப்பிற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். பிறகு கல்யாணம், காட்சி என்று ஆயிரம் செலவுகள் வரிசையாக நிற்கும்.”“கம்பெனியில் மாசா மாசம் பிராவிடண்ட் பண்டு என்று பிடிக்கிறார்கள். ஓய்வு பெறும் போது கிராஜூவிட்டி, அதாவது பணிக்
கொடையும் வரும்.”அவையெல்லாம் பத்தாதுங்கஸ”“இவ்வளவு பேசுகிற நீ முன்பு வீட்டுச் செலவுக்கு இருபத்தைந்தாயிரம் வாங்கிக் கொண்டாய், இப்போது முப்பதாயிரம் கேட்டு வாங்குகிறாய்ஸ”
“விலைகள் உயரும் போது கூடுதல் செலவு ஆகத்தானே செய்யும்ஸ”“இதோப்பாரு ஜனனி, நான் எம்.
இ. படித்தவன். மென்பொருள் துறையில் எல்லாவித திட்ட வேலைகளும் (பிராஜக்ட்) தெரியும். தொடர்ந்து சம்பாதிப்பேன் தெரியுமா?”
இனி பேசிப் பயனில்லை என்று எண்ணிய ஜனனி. பேச்சை நிறுத்திவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தாள். ஜனனி படித்த பெண். புத்திசாலியும் கூட. சமயோசித புத்தி உடையவள். வருவது வரட்டும் என்று அமைதி காத்தாள்.ஓராண்டு கழிந்தது. ஒரு நாள் மாலை தன் வேலை முடிந்து சீக்கிரமாகவே வீடு திரும்பினான் ஜெகதீசன். அவன் மிகவும் சோகமாகக் காணப்பட்டான். பின்னர் உடை மாற்றிக் கொண்டு, முகத்தைக் கழுவித் துடைத்தபடி சோபாவில் வந்தமர்ந்தான்.
அப்போது குழந்தைகள் ஓடி வந்து அவனது தோள்பையை திறந்து பார்த்தன. தினமும் குழந்தைகள் சாப்பிட ஏதாவது நொறுக்குத் தீனி வாங்கிவரும் ஜெகதீசன் அன்று எதுவும் வாங்கி வரவில்லை. ஏமாற்றத்துடன் அவன் முகத்தைப் பார்த்தபடி அங்கிருந்து சென்று விட்டனர்.ஜனனி எதுவும் பேசவில்லை. ஜெகதீசன் மெல்லக் களைத்தபடி பேச ஆரம்பித்தான்.“ஜனனி! வந்துஸ எங்கள் கம்பெனியில்ஸ”“என்ன செய்கிறார்கள்?”“ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர்களை வேலையை விட்டு தூக்கப் போகிறார்கள்.”
“என்ன காரணம்?”“கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறதாம். ஆட் குறைப்பு செய்தால்தான் நஷ்டத்தை ஈடுகட்ட முடியுமாம்.”
“என்ன செய்யப் போகிறீர்கள்?”
“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு.”
“வேலையை விட்டு அனுப்பும் போது என்ன தருவார்கள்?”
“மூன்று மாத சம்பளம், பி.எப். பணம், பணிக்கொடை ஆகியவற்றில் சேர்ந்துள்ள பணத்தை தருவார்கள்.”
“உங்கள் திட்டம் என்ன?”
“வேலை தேட வேண்டும். உடனே கிடைக்கலாம். ஆறு மாதம் கூட ஆகலாம்.”“சரிங்க! காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள் ஜனனி.
அன்று இரவு ஜெகதீசன் தூங்கவில்லை. காலைப் பொழுதில் சிறிது நேரம் கண்ணயர்ந்தான். அப்போது “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” என்ற பாடல் எங்கே ஒலிப்பது கேட்டது. அதைக் கேட்டபடியே எழுந்தான் ஜெகதீசன்.ஜனனி சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். பல் தேய்த்து விட்டுச் சோபாவில் வந்தமர்ந்தான். ஆவி பறக்க காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் ஜனனி. ஜனனியின் முகத்தைக் கவனித்தான். இவள் கவலைப்படாமல் எப்படி இருக்கிறாள்? தனக்குள் கேட்டுக் கொண்டு, அவளிடமும் அதை
கேட்டு விடுகிறான்.
“ஜனனி! நான் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீ எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறாயே. என்ன காரணமோ?” என்றான் ஜெகதீசன்.
“இல்லையே” என்றாள் ஜெனனி.“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? ஏதோ ரகசியம் இருக்கிறது. அது என்னவோ?”“கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி விட்டு, ஜனனி அலமாரியை திறந்து ஒரு பெரிய சூட்கேைச எடுத்து வந்து கீழே வைத்தாள். பின்னர் அதை திறந்தாள். உள்ளே பழைய புடவைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
“என்ன ஜனனி! பழைய புடவை வியாபாரம் செய்யப் போகிறாயா? காலை வேளையில் இந்தப் பெட்டியை எதற்காகத் திறக்கிறாய்?”ஜனனி பேசவில்லை. புடவைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்தாள். பெட்டியின் அடியில் இருந்த ஒரு துணிப்பையை எடுத்து அதில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள் பலவற்றை மொத்தமாக எடுத்து ஜெகதீசன் முன்பு நீட்டினாள். கவர்களை கையில் வாங்கிய ஜெகதீசன் திகைத்தான். ஒவ்வொரு கவருக்குள்ளும் சேமிப்புப் பத்திரங்கள்.
“ஜனனி! இந்தப் பத்திரங்கள் யாருடையவை?” என்றான்.இப்போது ஜனனி விளக்க ஆரம்பித்தாள்.“திருமணம் ஆன புதிதிலேயே நீங்கள் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதை அறிந்து கொண்டேன். இதனால் எதிர்காலத்தில் பாதிப்புகள் வரும் என்பதை உணர்ந்தேன். நீங்கள் கொடுக்கும் பணத்தில் பாதியை குடும்பச் செலவுக்கு வைத்துக் கொண்டு மீதியை சேமிக்க ஆரம்பித்தேன். கையில் நீங்கள் வைத்திருக்கும் பத்திரங்கள் எல்லாம், நீங்கள் கொடுத்த பணத்தில் சேமித்த கொஞ்ச பணத்தில் அவ்வப்போது வாங்கியவை. உங்களிடம் சொல்லாததற்கு மன்னிக்க வேண்டும்” என்றாள் ஜனனி.
“நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நான்தான் மன்னிப்பு கோர வேண்டும். பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும்?” என்றான்.
“ரூபாய் இருபது லட்சம் தேறும்.”“இது எப்படி சாத்தியமாயிற்று.
ஆச்சரியமாய் இருக்கேஸ”“ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நீங்கள் செய்த ஆடம்பரச் செலவை தவிர்த்திருந்தால் இன்னும் ஒரு பங்கு சேர்ந்திருக்கும்.”
“நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?”
“வீட்டுக் கடனை முழுமையாக அடைத்து விடுங்கள். மீதமுள்ள தொகையில் மூன்று லட்ச ரூபாயை குழந்தைகள் பெயரில் பத்திரங்களை வாங்கி விடுங்கள்.”உங்களுக்கு வேலை கிடைக்கும் வரை மீதமுள்ள பணம், கம்பெனி தரும் பணம், இவைகளை வைத்து சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.ஜெகதீசனின் கண்களில் கங்கை வழிந்தோடியது. கண்களை துடைத்தபடி மனைவியை பாராட்டினான். ஆரத் தழுவிக் கொண்டான். ஜனனி பழைய பாடல் ஒன்றைப் பாடினாள்.“சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்கப் பழகணும்பக்குவமாய் குடும்பந்தனில் அண்ணன் மாரே”ஸராஜாவுக்கு மந்திரி ஆலோசகர் மனைவியும் ஒரு மந்திரி போலத்தானே.