ஃப்ரீசரில் கிடைத்த உடல் பாகம்: பாலியல் புரோக்கருக்கு
24 Sep,2023
தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம் பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான் மேலும் படிக்க அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47). 2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான.
அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான். ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான். இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும்,
அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான். லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான். குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.