உடலுறவின் பொது ஏற்படும் காயங்கள் -? - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
18 Sep,2023
உடலுறவு என்பது உடலுக்கு நல்லது தான், ஆனால் சில சமயங்களில் அதில் ஈடுபட்டுள்ள ஆணும் பெண்ணும் நிதானத்தை இழக்கும்போது சில சமயங்களில் உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரி அப்படி என்னென்ன காயங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடலுறவில் உச்சகட்ட நிலைக்கு செல்லும்போது, சில சமயங்களில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் தங்கள் உடல்களில் காயங்கள் ஏற்படலாம். குறிப்பாக மார்பகம், கை மற்றும் கால் பகுதிகளில் கீறல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே காயங்கள் படும் அளவிற்கு செல்லாமல் இருப்பது நல்லது.
தசை பிடிப்பு
இதை காயம் என்று வகைப்படுத்த முடியாது, ஆனால் நிச்சயம் உடலில் இது அவஸ்தையை ஏற்படுத்தும்.
உடலுறவின் பொது இது அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஏற்படும் பட்சத்தில் வெண்ணீரில் குளிப்பது நல்லது.
சிலருக்கு லேடெக்ஸ் ஆணுறை பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் ஆணுறை பயன்படுத்துவது புத்திசாலித்தனமான செயல் தான், ஆனால் எல்லாவற்றிற்கும் சந்தையில் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் ஒரு அலர்ஜியுடன் சண்டையிடாமல் இருக்க லேடக்ஸ் அல்லாத ஆணுறைகளை பயன்படுத்தலாம்.