ஏழு நாள் திருவிழா.. சரியான துணையை தேர்ந்தெடுக்க திருமணத்திற்கு முன்பே உடலுறவு
18 Sep,2023
-
இந்திய அளவிழும் சரி, உலக அளவிலும் சரி, பல்வேறு இன கூட்டங்கள் தங்களுக்கே உரித்தான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு உடலுறவுகொள்ளும் ஒரு வழக்கத்தை கொண்ட பழங்குடியின மக்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இன்றளவும் தமிழகம் போன்ற பல இந்தியாவின் கிராமங்களில் காதலுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் பல கடுமையான சடங்குகளை கொண்ட இதே இந்தியாவில் திருமணத்திற்கு முன்னதாகவே இளம் ஆண் மற்றும் பெண்களை உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் பழங்குடி இன மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்றளவும் அந்த சடங்குகளை பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள் தான் முறியா (Muria) ன்ற பழங்குடி இன மக்கள். இவர்கள் இடையே தான் இப்படி ஒரு வினோத சடங்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த முறியா மக்கள் 7 நாள் கொண்டாடும் திருவிழாவில் வயதுக்கு வந்த, ஆனால் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் வண்ணம் திருவிழா நடத்துகின்றனர்.
காலை முதல் மாலை வரை ஆடிப்பாடி இளம் ஆணும் பெண்ணும், மாலை நேரத்தில் ஒரு மூங்கில் குடிலுக்குள் தங்களுக்கு விருப்பமான துணையுடன் சென்று உடலுறவு மேற்கொள்கின்றனர். இந்த ஏழு நாள் திருவிழாவில் அவர்கள் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏழாம் நாள் முடிவில் அவர்கள் மனம் கவர்ந்த ஆணை அல்லது பெண்ணை அவர்கள் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.