அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? பட்டியல் இதோ!
17 Sep,2023
1/ 6 இப்போது சிலர் மனதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குதான் அதிக சம்பளம் இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ஒரு சின்ன கதையுடன் தொடங்கலாம். 2016 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சம்பளமான 400,000 டாலர்களை வாங்க மறுத்த கதை யாருக்காவது தெரியுமா? அவர் அதற்கு பதிலாக, தனது சம்பளமாக 1 டாலர் மட்டுமே வாங்க முடிவு செய்தார். இந்த நிலையில் உலகத் தலைவர்களின் சம்பளம் வானளவு உயர்ந்துள்ளதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறோம். இவர்களுக்கு சம்பளம் தவிர பிற மேம்பட்ட சலுகைகளும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே உலக அரசியல் தலைவர்களின் ஊதியம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக மக்கள் தொகை மதிப்பாய்வு வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை காண்போம். இப்போது சிலர் மனதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குதான் அதிக சம்பளம் இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
2/ 6
லீ சியென் லூங் - சிங்கப்பூர் பிரதமர்: பிற அரசு தலைவர்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் தான் அதிக சம்பளம் வாங்குவதாக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் படி, அவர் ஆண்டுதோறும் சுமார் 2.2 மில்லியன் டாலர்களை சம்பளமாகப் பெற்றுள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சம்பாதிப்பதை விட அதிகமாகும் 5.5 மடங்கு அதிகமாகும். இதை விட குறைவாக 400,000 டாலர்களை சம்பளமாக ஜோ பைடன் பெறுகிறார். லூங்கின் சம்பளம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஊதியத்தை விட 12 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சிங்கப்பூர் பிரதமரும் இதே சம்பளத்தை பெறுவார் என்றே கூறப்படுகிறது
3/ 6
கேரி லாம் - ஹாங்காங்: 2017 முதல் 2022 வரை ஹாங்காங்கின் 4வது தலைமை நிர்வாகியாக பணியாற்றிய கேரி லாம், அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) அறிக்கையின்படி, லாமின் ஆண்டு வருமானம் தோராயமாக $672,000 ஆகும். அனைத்து தலைவர்களுக்கும் 12.4 விழுக்காடு ஊதிய உயர்வை ஹாங்காங் அரசாங்கம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் இந்த தொகைக்கு முன்னேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4/ 6
ஜோ பைடன் - அமெரிக்க அதிபர்: அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். தற்போது $400,000 டாலர்களை இவர் சம்பளமாகப் பெறுகிறார். மேலும், வெள்ளை மாளிகை, பிரபலமான ஏர்ஃபோர்ஸ் ஒன் உள்ளிட்ட சில ஆடம்பர வசதிகளுக்கான அணுகலையும் பெற்றுள்ளார்.
5/ 6 .
ஸ்காட் மோரிசன் - ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆண்டுக்கு $550,000 டாலர்களை சம்பளமாகப் பெறுகிறார். இந்நாட்டில் தலைவர்களின் சம்பள அதிகரிப்பை மேற்பார்வையிடும் பொறுப்பு சுயாதீன ஊதிய தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர்களின் சம்பளம் நாட்டின் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
6/ 6
ஏஞ்சலா மெர்க்கல் - ஜெர்மனி: ஏஞ்சலா மேர்க்கெல் ஜெர்மனி நாட்டின் அதிபராக உள்ளார். அவரது ஆண்டு வருமானம் $369,727 டாலர்கள் ஆகும். இது ஜெர்மனியில் உள்ள ஒரு குடும்பத்தின் சராசரி வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது