மறைந்த தாயின் கடைசி ஆசை.. உருக்கமுடன் நிறைவேற்றிய பெண்!
17 Sep,2023
பொதுவாக பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதற்கு பல பிள்ளைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் இந்த உலகில் வாழும் போதே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பார்த்து பார்த்து நிறைவேற்றி வைக்கும் பிள்ளைகள் ஏராளம். ஒரு சில பெற்றோர் தங்களது கடைசி ஆசை என்று சில விஷயங்களை பிள்ளைகளிடம் கூறி, தாங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்த பிறகு அவற்றை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைப்பார்கள்.
இந்த நிலையில் இறந்த தனது 93 வயதான தாயின் வித்தியாசமான கடைசி ஆசையை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் நிறைவேற்றி வைத்து உள்ளார். இது நெட்டிசன்களிடையே பெரும் வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அபப்டி என்ன தான் அந்த மூதாட்டி கட்சி ஆசையாக கேட்டுவிட்டார் என யோசிக்கிறீர்களா?
இங்கிலாந்தைச் சேர்ந்த Pauline Polhill என்ற அந்த மூதாட்டி, தன்னுடைய மக்களிடம் தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தியை ட்ரோன் மூலம் காற்றில் தூவ வேண்டும், இது தான் என்னுடைய கடைசி ஆசை. இப்படி செய்வதன் மூலம் இந்த பூமியில் என்றென்றும் நான் உயிருடன் இருப்பேன் என கூறி இருக்கிறார். இந்நிலையில் 93 வயதில் Pauline Polhill இறந்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய தாயின் கடைசி விருப்பத்தை நிறைவேற்று விதமாக, அவர் சொன்னபடி ட்ரோனை பயன்படுத்தி Pauline Polhill-ன் சாம்பலை அவரது மகள் காற்றில் தூவி பரவ செய்துள்ளார்.
இது குறித்து இறந்த Pauline Polhill-ன் மகளான பெவர்லி சார்ன்லி கூறுகையில், தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற தானும், தனது கணவர் ரிச்சர்ட்டும் ராட்ஸ்டாக்கில் உள்ள Co-op Funeralcare's Aerial Ashes Service-ஐ தொடர்பு கொண்டோம். எனது தாயின் கடைசி ஆசையை நினைவாக்க இந்த அமைப்பு உதவியது.
ஆனால் இதற்கு பல நாட்கள் தேடலில் ஈடுபட வேண்டியிருந்தது. இறுதி சடங்குகளை செய்யும் பல நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. பல முயற்சிகளுக்கு பின்னரே தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றார். இந்த இறுதி சடங்கு நிறுவனம் நிலத்திலும், கடலிலும் பல்வேறு இடங்களில் இறந்தவர்களின் சாம்பலை தூவ ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
கேன்சரால் இறந்த Pauline Polhill-ன் கடைசி ஆசை கடந்த ஏப்ரல் 13 அன்று பெவர்லி சார்ன்லி - ரிச்சர்ட் தம்பதியரின் தோட்டத்தில் நடந்துள்ளது. இது குறித்து கூறி இருக்கும் பெவர்லி சார்ன்லி எங்களது மொத்த குடும்பமும் எண்கள் வீட்டு தோட்டத்தில் இருந்தோம். எனது தாயாரின் சாம்பலை ட்ரோன் காற்றில் தூவப்படுவதை பார்த்தோம், பின்னணியில் பேண்ட் இசைக்கப்பட்டது. எல்லோருமே சில நிமிடங்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டோம். இருந்தாலும் கூட அப்போது எனது தாய் வானத்தில் சிரித்து கொண்டிருப்பதை போல நான் உணர்ந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.