இது தான் ஏலியன் எலும்புக்கூடா? பதறவைக்கும் சடலங்கள்..
13 Sep,2023
பற்கள் இல்லாமல் 3 கைவிரல்கள் கொண்ட இவை ஏலியன்ஸ் என்று கூறியுள்ள ஆராய்ச்சியாளர், பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறியுள்ளார்.
1/ 8 மனிதன் அல்லாத ஆனால் மனிதனைப் போன்ற 2 சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியுள்ளது.
2/ 8 இவை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன.
3/ 8 இந்த சடலங்கள் வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸின் சடலங்களாக இருக்கும் என்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4/ 8 மெக்சிகோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் இந்த சடலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
5/ 8 இவற்றில் 3 கை விரல்கள் மட்டுமே காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மனிதனை ஒத்த சாயலில் ஆனால் வேற்றுகிரகவாசிகள் உருவத்தில் இவை உள்ளன.
6/ 8 பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும் சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
7/ 8 ஏலியன்ஸ் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வரும் ஜேமி மவசான் இது ஆராய்ச்சியின் முக்கிய திருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
8/ 8 பற்கள் இல்லாமல் 3 கைவிரல்கள் கொண்ட இவை ஏலியன்ஸ் என்று கூறியுள்ள அவர், பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறியுள்ளார்.