50 அடி நீளத்தில் ஆற்றில் தென்பட்ட அதிசய உயிரினம்? அறிவியலாளர்கள் தீவிர ஆராய்ச்சி
07 Sep,2023
சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தியான்சி ஏரி அமைந்துள்ளது. இதன் சராசரி ஆழம் 670 அடி ஆகும். அதிகபட்ச ஆழம் 1223 அடியாக உள்ளது.
சீனாவின் உள்ள ஆற்றில் 50 அடி நீளத்திற்கு அதிசய உயிரினம் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அறிவியலாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள். சீனாவின் தியான்சி பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஷாங்காயை சேர்ந்த லீ என்ற பெண் ஒருவர் ஆற்றில் 50 அடி நீளத்தில் ஓய் உயிரினம் ஒன்றை பார்த்துள்ளார்.
வெள்ளி நிறத்தில் இந்த உயிரினம் மின்னியதாக தெரிவித்துள்ள லீ 600 அடி தொலைவில் இதனை பார்த்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை எடுத்த அவர், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
இதன் பின்னரே இந்த விஷயத்தை கொஞ்சம் சீரியஸாக அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதுபற்றி அவர் கூறுகையில், கையில், ‘நான் முதலில் பார்த்தது மீனாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நெருங்கி உன்னிப்பாக கவனித்தபோது அது மீன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். நான் பார்த்த உயிரினம் வெள்ளி நிறத்தில் இருந்தது’ என்றார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், ‘இந்த ஆற்றில் ஏதோ பெரிய உயிரினம் இருப்பதாக கூறி சுற்றுலா பயணிகள் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். கற்பனைக்கு எல்லையே கிடையாது.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பதைப் போல இந்த ஆற்றில் ஏதாவது பெரிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.’
சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தியான்சி ஏரி அமைந்துள்ளது. இதன் சராசரி ஆழம் 670 அடி ஆகும். அதிகபட்ச ஆழம் 1223 அடியாக உள்ளது. சுமார் 10 வினாடிகள் அந்த அதிசய உயிரினம் தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அறிவியலாளர்கள் மற்றும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை தொடங்கியுள்ளனர்.