ஒரு நபர் இறந்த பின்பு உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் சார்ந்த செயல்பாடுகள்
அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமைகள், முன்னேற்றங்கள் என்பதை கடந்து பல கேள்விகளுக்கு இன்னும் சரியான விடையை தெரிந்து கொள்ள முடியவில்லை. அதில் ஒன்றுதான் உயிர் அல்லது ஆன்மா சார்ந்தது. உயிர் எங்கே இருக்கிறது, உயிர் இழந்த பிறகு உயிருக்கு என்ன ஆகும்? உயிர் எங்கு செல்லும்? உடல் இறந்த பின்னர், உயிர் என்று அறியப்படும் ஆன்மா சுற்றிக்கொண்டு இருக்குமா? ஆன்மாவிற்கு அழிவில்லையா? என்று மனிதன் இறந்த பிறகு அந்த ஆன்மாவிற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி ஏகப்பட்ட கேள்விகளும் அதற்கான ஆய்வுகளும் உள்ளன!
உயிருக்கு மறுபிறவி உண்டா
பல நூற்றாண்டுகளாக ஆன்மா அழியக்கூடியதா? அல்லது ஆன்மா அழிவில்லாததா? என்ற கேள்விக்கு சமீபத்தில் விஞ்ஞானிகள் பதில் கூறியுள்ளனர் இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்மாவுக்கு அழிவே இல்லை, உடலுக்கு தான் அழிவு இருக்கிறது. ஒரு உடலில் இருந்து பிரியும் உயிர், மீண்டும் பிறக்கும், இது தான் மறுபிறவி என்று கூறப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்த வரை மறுபிறவி என்ற ஒரு விஷயமே கிடையாது. ஒரு உடல் இறந்துவிட்டால் அந்த உடல் மட்டுமல்ல ஆன்மாவும் இறந்து போகும் என்று கூறுகின்றனர்.
அப்போது ஒரு நபர் இறந்த பின் என்ன தான் நடக்கும்? இந்த கேள்வி பலமுறை கேட்கப்பட்டது இதற்கு பல கண்ணோட்டத்தில் பதில்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதுதான் சரியான பதில் என்று எதையும் வரையறுக்க முடியாது. அறிவியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு புராணங்கள் மற்றும் நூல்களின் அடிப்படையில், ஆன்மா மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து கொண்டே இருக்கும். இதனடிப்படையில் தான் எக்கச்சக்கமான மறுபிறவி கதைகள் கூறப்பட்டுள்ளன, நாமும் பல கதைகளை படித்து இருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் கூட வட இந்தியாவில் மும்தாஜின் என்ற பெண், தான் மறுபிறவி என்று கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ஒரு மொழியில் பரிச்சயம் இல்லாதவர் அந்த மொழியை சரளமாக பேசுவது கூட மறுபிறவி தான் என்று கதைகள் உலவி வருகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இவை அனைத்துமே பொய், மறுபிறவி என்பதே கிடையாது என்று ஆணித்தனமாக கூறுகின்றனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியரான மருத்துவர் ஷான் கரோல், அறிவியல் பூர்வமாக இறந்த பின்பு உயிர் என்பதே கிடையாது என்று கூறுகிறார்.
டெய்லி மெயிலில் வெளியான ஒரு செய்தியின் படி, பேராசிரியர் நெவாடாவில் நடைபெற்ற ஒரு கான்பரன்சில் ‘ஒரு நபர் இறந்த பின்பு மூளை எப்படி செயல்படும் அல்லது எவ்வாறு செயல்படும் என்பதை பற்றி விளக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு நபர் இறந்த பின்பு உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே நின்றுவிடும். எனவே உயிர் நீடிக்க எந்தவிதமான வழியும் இல்லை. இயற்பியல் விதிகளின்படி இறந்த நபருடைய கான்ஷியஸ்னஸ் எந்த விதத்திலும் வேலை செய்யாது என்ற காரணத்தால் மறுபிறவிக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஆன்மா என்ற விஷயமே இல்லை என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். மனித உடல் என்பது ஒரு ரசாயனக் கலவை. இயற்கையின் விதிகளின் படி, மனித உடல் ஆட்டம்களின் கூட்டம். அது ரசாயனங்களின் விளைவுகளால் இயங்குகிறது, ஸ்ப்ரிச்சுவல் ஆற்றலால் அல்ல. அதற்கான எக்ஸ்பைரி காலம் வந்த பிறகு, அதாவது வாழ்நாள் முடிந்துவிட்டால், அது முழுவதுமாக அழிந்து விடும். அது மட்டுமல்ல, ஒரு புதிய உயிரால், முற்பிறவியில் நடந்ததை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.