குள்ளமாக இருக்கும் பெண்களை ‘ஏஞ்சல்ஸ்’ என்று சில ஆண்கள் குறிப்பிடுவதுண்டு. அவ்வப்போது உயரம் குறைவாக இருக்கும் பெண்களை கலாய்த்து வெளிவரும் மீம்ஸ்களை பார்த்திருப்போம். குள்ளமான பெண்கள் என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கருத்து ஒன்று உள்ளது. இது உண்மையா? ஆண்களுக்கு குள்ளமான பெண்களை பிடிப்பது ஏன்?
குள்ளமான பெண்களுடன் இருக்கும் போது, அவர்களை பாதுகாப்பது போன்ற உணர்வு அவர்களை விட உயரம் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு ஏற்படும். தங்களுடன் இருக்கும் குள்ளமான பெண்ணை பார்த்துக்கொள்ள வேண்டும் அவரை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது, அவர்களுடனான உறவையும் மேம்படுத்த இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுக்கும். இந்த உயர வித்தியாசமே இவர்களுக்கும் நெருக்கத்தை உருவாக்கும்.
இருவரும் ஒன்றாக நிற்கும் போது தெரியும் உயர வித்தியாசமே அவர்களுக்குள் இருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்தும். உயர வித்தியாசம் இருக்கும் ஜோடிகள் பெரும்பாலானோர் உண்டு. உயரத்தில் வெவ்வேறாக இருப்போருக்கும் அன்பும் அக்கறையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
சமூகத்தில் பலர் பெண்களுக்கு என சில கோட்பாடுகளை விதித்து வைத்திருக்கின்றனர். அதில் பெண்கள் குள்ளமாக இருப்பதும் ஒன்று. பெண்கள் குள்ளமாக இருப்பதை சில ஆண்கள் பெண்மையின் தன்மைகளில் ஒன்றாக கருதுகின்றனர். இதனாலும் சில ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களை பிடிக்கும்.
குள்ளமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது உண்மையான வயதை விட மிகவும் குறைந்த வயதுடையவராக தோன்றுவர். இதனால் சில ஆண்கள் குள்ளமாக இருக்கும் பெண்களால் ஈர்க்கப்படுவர்.
ஒரு உறவில் இணையும் போது உடல் அளவில் ஈர்ப்பு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். காதல் அல்லது ரொமாண்டிக் உறவில் இருப்போர், உயர அளவில் வேறாக இருந்தால் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என வசதியாக இருக்கும். நெருக்கத்தை உணரும் தருவாயில் அவர்களை கட்டிப்பிடிக்கவோ அவர்களை தொடவோ எந்த வித இடையூறுகளும் இருக்காது. இதனாலும் ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களை பிடிக்கும்.
நடைமுறை வாழ்க்கையின்படி குள்ளமாக இருப்போருக்கு சிறிய அளவிலான இடம்தான் எங்கு சென்றாலும் தேவைப்படும். இது பெரும்பாலும் பிறருக்கு கஷ்டம் தராத விஷயமாக இருக்கும். அதனால், பல ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களை பிடிக்கும்.
சில குள்ளமான பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும் பெண்களுக்கு அவர்கள் மீதும் அவர்களின் செயல்கள் மீதும் எந்த சந்தேகமும் இருக்காது. இது போன்ற தன்னம்பிக்கை குணாதிசயத்தை பல ஆண்கள் ரசிப்பர்.
சிறியதாக இருக்கும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அது பலரது கண்களுக்கு அழகாக தெரியும். இந்த பண்பு பல ஆண்களை குள்ளமாக இருக்கும் பெண்களின் பக்கம் ஈர்க்கிறது. இதனால் குள்ளமாக இருக்கும் பெண்கள் வசீகரம் பெற்றவர்களாக இருப்பதாக பலர் உணருகின்றனர்.
சில ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களுடன் இருப்பது மிகவும் சுலபமானதாகவும் எளிமையான விஷயமாகவும் தோன்றும். இது அவர்களுடன் கைக்கோர்த்து நடந்து போவதாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுடன் நடனமாடுவதாக இருந்தாலும் சரி. அவர்களுக்குள் உயர அளவில் வித்தியாசம் இருந்தால் இது போன்ற செயல்பாடுகளை செய்வது அவர்களுக்கு எளிமையானதாக தோன்றும்.