அமெரிக்காவின் எந்த மாநிலத்தின் பெயரிலும் இருக்காதுஸஎந்த எழுத்து தெரியுமா?
01 Sep,2023
அமெரிக்காவில் இருக்கும் 50 மாகாணங்களின் பெயர்களிலும் தேடிப்பாருங்கள், ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் எந்த மாகாணத்தின் பெயரிலும் இருக்காது. அது எந்த எழுத்து என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
உலகில் வல்லரசாக இருக்கும் நாடு அமெரிக்கா. அந்த நாட்டில் 50 மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்கும். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளில் 25 எழுத்துகள் மட்டுமே அந்த மாநிலங்களின் பெயர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு எழுத்தை நீங்கள் தேடினாலும் இருக்காது. ஒருவேளை அந்த எழுத்து J அல்லது Z என நீங்கள் கெஸ் செய்திருந்தால் அது தவறு.
ஏனென்றால் New Jersey மற்றும் Arizona என இந்த மாநிலங்களின் பெயர்களில் இந்த எழுத்துகள் இருக்கும். அதே போல் F என்ற ஆங்கில எழுத்தை இரண்டே இரண்டு மாகாணங்களின் பெயர்கள் தான் கொண்டிருக்கும். அவை California மற்றும் Florida. இந்த இரண்டு மாநிலங்களின் பெயர்களில் மட்டும் தான் F என்ற எழுத்து இருக்கும். ஒருவேளை விடுபட்ட அந்த எழுத்து X என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. ஏனென்றால் New Mexico மற்றும் Texas என இரண்டு மாநிலங்களின் பெயர்களில் X என்ற எழுத்து உள்ளது. பின் எது தான் அந்த எழுத்து என்கிறீர்களா? Q- தான் அந்த எழுத்து.
அமெரிக்காவின் 50 மாநிலங்களின் பெயர்களை பட்டியலாக எழுதி வைத்துக் கொண்டு தேடிப்பாருங்கள். எந்த மாநிலத்தின் பெயரிலும் Q- இருக்காது. இது தற்செயலாக அமைந்ததா? அல்லது திட்டமிடப்பட்டு விடுபட்டதா என்பதெல்லாம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. ஆனால் எந்த மாநிலத்தின் பெயரிலும் Q- என்ற எழுத்து மட்டும் இருக்காது.