3 குழந்தைகளின் தாய் சடலமாக மீட்பு.. பலாத்காரம் செய்து கொன்றது அம்பலம்
30 Aug,2023
மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக அடித்து கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது.
ஹைதராபாத் நானக்ரங்குடா பகுதியை சேர்ந்த 38 வயது பெண். திருமணமான இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 25 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் - டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றுக்கான ஆரம்ப சலுகைகள் 65% வரை தள்ளுபடி
இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கச்சிப்பௌலி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெறும் கட்டடம் ஒன்றில் அவர் இரும்புக் கழிவுகளை சேகரிக்க சென்றதை அறிந்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு கட்டுமானப் பணி நடைபெறும் கட்டடத்தில் உள்ள பாதாள அறையில் பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மாயமான பெண்ணின் சடலம்தான் அது என்பதை உறுதி செய்தனர்.
முதற்கட்ட தகவலில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 48 மணி நேரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் சைபராபாத் காவல் ஆணையர் ஆகியோருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.