நிலவின் மேற்பரப்பில் இரும்பு, சல்ஃபர்.. கனிமங்கள் விவரங்களை அனுப்பிய பிரக்யான் ரோவர்!
29 Aug,2023
நிலவின் ரகசியத்தை விரைவில் வெளி கொணர்வேன் என்று பிரக்யான் ரோவர் கூறுவதை போன்று இஸ்ரோ டிவிட்டரில் பதிவிட்டது. அதன்படி தாதுக்கள் தொடர்பான தகவலை ரோவர் அனுப்பியுள்ளது
ன் தென் துருவத்தை ஆராய்வதற்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனை தொடர்ந்து திட்டமிட்டப்படி, கடந்த 23 ஆம் தேதி நிலவில் சந்திரயான் கால் பதித்தது. அதில் உள்ள ரோவரான பிரக்யான் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்கிறது. இதனை துல்லியமாக கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரக்யான் கூறுவதை போன்று டிவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில், பிரக்யானும், விக்ரம் லேண்டரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நிலவின் ரகசியங்களை ரோவர் விரைவில் வெளி கொண்டு வரும் என்று இஸ்ரோ பதிவிட்டது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்கள் தொடர்பான தகவலை ரோவர் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர், குரோமியம், மேங்கனீஸ், கால்சியம், அலுமினியம், இரும்பு ஆகிய தாதுக்குள் இருப்பதை ரோவர் கண்டுபிடித்துள்ளது. மேலும் சில கனிமங்களும் நிலவில் இருப்பதாக ரோவர் தகவல் அனுப்பியுள்ளது.