வீடு வாங்கும் கனவு.. இமெயில் மோசடியால் ரூ.2 கோடியை இழந்த தம்பதி
27 Aug,2023
..
வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணத்தைக் கொண்டு ஒரு கனவு வீடு வாங்க நினைத்த தம்பதிகளிடம் இருந்து ரூ.2 கோடியை மோசடி நபர்கள் வங்கி மோசடி மூலம் திருடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற இடத்தில் தங்களின் வாழ்நாள் சேமிப்பு பணத்தைக்கொண்டு புதிய வீடு வாங்க சைமன் எல்வின்ஸ் மற்றும அவரது மனைவி திட்டமிட்டுள்ளனர். அதே போல், ஒரு வீட்டையும் கண்டுப்பிடித்து அதற்காக முயற்சிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீடு போரோக்கர் மூலம் ஒரு வீட்டை கண்டறிந்து அதற்காக இந்திய மதிப்பு படி சுமார் 2 கோடி ரூபாயை (274,311 அமெரிக்க டாலர்) இமெயில் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் போக்கர் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். பணம் அனுப்பியதற்கான எந்த ஒரு கன்ஃபர்மேஷனும் பெறாததால் ரியல் எஸ்டேட் ஏஜெண்டை தொடர்பு கொண்ட சைமன், தான் பண மோசடியில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
உண்மையான இமெயிலை கிரிமினல்கள் மாற்றி அமைத்து இன்வாய்ஸ் அக்கவுண்டில் தங்களது வங்கி விவரங்களை சேர்த்து சைமனுக்கு அனுப்பியுள்ளனர். இதில் மோசடிக்காரர்கள் இன்டர்செப்ஷன் என்ற முறையை கையாண்டு உள்ளனர். அதாவது பணம் சரியான இடத்தை சென்று அடையாமல், இடையிலேயே அதனை நிறுத்தி திருடுவதே இவர்களின் வேலை. இதில் மோசடிக்காரர்கள் உண்மையான நபர்களைப் போல தங்களை இமெயில் மூலமாக காட்டிக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் பேசி பணத்தை ஒரு குறிப்பிட்ட அக்கவுண்டிற்கு அனுப்புமாறு சொல்வதன் மூலமாக மோசடி செய்வார்கள்.
தற்போது பேமெண்ட் ரீ டைரக்ஷன் ஸ்கேம்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 13.7 அமெரிக்க மில்லியன் டாலர்கள் இந்த மோசடி மூலமாக திருடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 95 சதவீதம் இந்த மோசடி அதிகமாகியுள்ளது. சைமன் வெஸ்ட் வங்கி அக்கவுண்டில் இருந்து NAB அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிய ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த அக்கவுண்ட் மாயமானது. இந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சவாலான காரியமாக மாறிவிட்டது. எனினும், அந்த தம்பதியால் 270.72 அமெரிக்க டாலர் மட்டுமே திரும்ப பெற முடிந்தது.
ஒரு சில சட்ட ரீதியான சவால்களை சந்தித்ததற்கு பிறகு சைமன் மற்றும் அவரது மனைவி 10 சதவீத டெபாசிட் மட்டும் செலுத்தி அந்த வீட்டை தமக்கு சொந்தமாக்கி கொண்டனர். ஆனால் தற்போது அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக கடன் சுமையில் மாட்டிக்கொண்டனர்.