ரஸ்யாவின்கூலிப்படைதலைவர் கொல்லப்படுவதற்கான காரணமான விமானவிபத்து இடம்பெற்ற ரஸ்ய கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலில் பாரிய சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் விமானம் தரையைநோக்கி செல்வதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எம்பிரேயர் லெகசி 600 என்ற தனியார் விமானம் ரஸ்யாவின் வெர் பிராந்தியத்தின் குஜென்கினோ கிராமத்திற்கு அருகில் விழுந்து நொருங்கியது.
மொஸ்கோவிலிருந்து செயின்பீட்டர்ஸ்பேர்க்கினை நோக்கி பத்துபேருடன் சென்றுகொண்டிருக்கையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.- விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரிகோஜினிற்கு என்ன நடந்தது என கிரெம்ளினோ அல்லது ரஸ்ய பாதுகாப்பு தரப்போ இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எனினும் வாக்னர் கூலிப்படைக்கு சொந்தமான கிரேஜோன் என்ற டெலிகிராம் ஒன்று பிரிகோஜின் விமானவிபத்தில் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளது.
விமானம் விழுந்துநொருங்கிய பகுதிக்கு சென்ற ரொய்ட்டர் செய்தியாளர் உடல்கள் கறுப்பு பையில் எடுத்துச்செல்லப்படுவதை பார்த்துள்ளளனர்.
தடயவியல் நிபுணர்கள் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர்,அரைவாசி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றிற்கு அருகில் விமானத்தின் சில சிதைவுகளை அவதானிக்க முடிகின்றது.
பாரிய சத்தமொன்றை கேட்டேன் வழமையாக நிலத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றால் எதிரொலியொன்று கேட்க்கும் ஆனால் எனக்கு சத்தமொன்று கேட்டது நான் மேலே பார்த்தேன் வெள்ளை புகைமண்டலம் தெரிந்தது என அந்த பகுதியை சேர்ந்த 72 வயதான விட்டெலி ஸ்டெபெனொக் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் சிறகு ஒரு பக்கத்தில் சென்றது விமானத்தின் மற்றைய பாகமும் அப்படியே சென்றது என தெரிவிக்கும் அவர் விமானம் எப்படி நிலத்தை நோக்கி வந்தது என்பதை கைகளை விரித்து காண்பித்தார்.
பின்னர் அது ஒரு இறக்கையுடன் தரையை நோக்கிசென்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அந்த கிராமத்தில் நின்றபடி அந்த விமானம் தனது வீட்டின் மீது விழுந்துவிடுமோ என அச்சமடைந்ததாக ஸ்டீபெனொக் தெரிவித்தார்.
நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்,எனது பைக்கினை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு 20 நிமிடங்களில் சென்றுவிட்டேன் - அனைத்தும் எரிந்துகொண்டிருந்தது,மக்கள் அதனை சுற்றி காணப்பட்டனர், சிதைவுகளில் இருந்து யாரையோ அவர்கள் இழுத்து எடுத்தனர்,நான் விமானத்தின் இலக்கத்தினை பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இது இடியல்ல உலோக இடி என தெரிவிக்கும் அந்த கிராமத்தை சேர்ந்த அனடொலி என்பவர் இதற்கு முன்னரும் இதேபோன்ற சத்தங்களை கேட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.
அங்கு அந்த பகுதியில் விமானம் விழுந்தது என அவர் கையை நீட்டி காண்பித்தார்.
ரஸ்ய இராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு பிரிகோஜின் தலைமைதாங்கி இரண்டுமாதங்களாக உள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.