மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டும் வாழைப்பழத்தோல்... இனிமே தூக்கி எறியாதீங்க!
படுக்கையறை டிப்ஸ்: ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்..?
உங்கள் பாலியல் வாழ்க்கை உங்கள் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையைத் திரும்பப் பெறவும், மேலும் நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித உளவியல் ரீதியான பிரச்சனைதான். இதைத்தவிர்க்க ஒரு மாத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்பதை இங்கு பார்ப்போம்.
சமூகத்தை பொருத்தவரை, குறிப்பாக இந்திய சமூகத்தை பொருத்தவரை பாலியல் சார்ந்த விஷயங்களோ, அல்லது உடலுறவு சார்ந்த விஷயங்களோ பேசக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசுவதாலும், பாலியல் சார்ந்த அறிவுகள் வளர்வதாலும் ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவருக்குமே நண்மைகள் ஏற்படும். இதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிப்பருவத்திலேயே இது சார்ந்த கல்வியை கற்றுக்கொடுக்க பலர் அறிவுருத்தி வருகின்றனர். காதல், காமம், இச்சை, ஆசை, தொடுதல் போன்ற பல உணவர்வுகளை வெளிப்படுத்த உடலுறவு உபயோகப்படும். இது, காதலர்கள் அல்லது கணவன்-மனைவிக்குள் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.
உடலுறவினால் ஏற்படும் பலன்கள்..!
உடலுறவு வைத்து கொள்வதால் நம் உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி நன்மைகளையும் உருவாக்கும். ரத்த அழுத்தத்தை குறைப்பது, பதற்றத்தை தவிர்ப்பது என பல வகையான விஷயங்கள் இதில் அடங்கும். இதனால் நமக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம், நல்ல ரத்த ஓட்டம் ஆகியவற்றிற்கு இது உதவும். இதனால் நம் தனிப்பட்ட வாழ்விலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்..?
பார்ட்னர்களை வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் கணவன் மனைவியாக இருப்போர்தான் அதிக நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு தரவு கூறுகிறது. ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் வைத்துக்க்கொள்ள வேண்டும் என உடலுறவுக்கு வரையறை எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ, சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனாலும், வாரத்திற்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் பார்ட்னர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து, நல்ல ரிலேஷன்ஷிப்பிற்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது.
அதிக உடலுறவினால் ஏற்படும் பிரச்சனைகள்:
உடலுறவினால் ஏற்படும் நன்மைகள் போலவே பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் இதே உடலுறவு, சில சமயங்களில் அதை உருவாக்கவும் செய்யலாம். இது, சமயயங்களில் நமக்கு முதுகு வலியையும் ஏற்படுத்தும். ஆண்களுக்கு அடிக்கடி விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளும் பெண்களுக்கு உச்ச நிலையை அடைய முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம் என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். உடலுறவின் பின்விளைவாக கர்ப்பம் தரிக்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் இதை பெரும் பிர்ச்சனையாக பார்க்கின்றனர்.