விமானத்தில் தனக்கு அருகில் பயணம் செய்த 14 வயது சிறுமிக்கு அருகில் அமர்ந்து, சுயஇன்பம் கொண்டதாக 33 வயதான இந்திய அமெரிக்க மருத்துவர் ஒருவரை ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹொனலுலுவில் (Honolulu) இருந்து பாஸ்டன் செல்லும் விமானத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்ததாக அமெரிக்க அட்டர்னி அலுவலகம் தெரிவித்துள்ளது. மாசசூசெட்ஸைச் சேர்ந்த அந்த சுதிப்தா மொஹந்தி என அடையாளம் காணப்பட்ட மருத்துவர், கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
"அமெரிக்காவின் சிறப்பு விமான அதிகார சட்டத்திற்கு உட்பட்டு, விமான பயணத்தில் ஒரு மோசமான, அநாகரீகமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக" அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பின்படி, பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தின் முதன்மை பராமரிப்பு மருத்துவர் டாக்டர் மொஹந்தி, ஒரு பெண்ணுடன் அந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல அந்த 14 வயது சிறுமி அவரது தாத்தா பாட்டியுடன் அந்த விமானத்தில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. அண்ட் விமானம் தனது பாதி தூரத்தை எட்டிய நிலையில் அந்த 33 வயதான அவர் கழுத்து வரை போர்வையால் தன்னை மூடிக்கொண்டதையும், அவரது கால் மேலும் கீழும் துள்ளுவதையும் அந்த சிறுமி கவனித்துள்ளார்.
"சிறிது நேரத்திற்குப் பிறகு, போர்வை கீழே கிடந்ததையும், அந்த நபர் சுயஇன்பம் கொள்வதையும் கண்டதாக அந்த சிறுமி கூறியுள்ளார். உடனே அங்கிருந்து எழுந்து விமானத்தில் காலியாக இருந்த வேறொரு இருக்கைக்கு அவர் சென்றுள்ளார்" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்டனில் விமானம் தரையிறங்கிய பிறகு, சிறுமி சம்பவம் குறித்து தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்தார், மற்றும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நியூயார்க் போஸ்ட் அளித்த தகவலின்படி, டாக்டர் மொஹந்தி விசாரணையின் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், "மேலும் எனக்கு இந்த சம்பவம் பற்றி நினைவில் இல்லை" என்று கூறியுள்ளார்.
டாக்டர் மொஹந்தி வியாழன் அன்று ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், விமானத்தில் இருந்த ஒரு மைனர் சிறுமியின் முன் அநாகரீகமான செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 90 நாட்கள் வரை சிறைத்தண்டனையும், ஒரு வருடம் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலையும் மற்றும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படும். 18 வயதிற்குட்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது மற்றும் அவர்கள் கூடும் இடங்கள் போன்ற நிபந்தனைகளுடன் அவர் தனிப்பட்ட அங்கீகாரத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.