வாடகைக்கு வீடு எடுத்து இஷ்டத்துக்கு உல்லாசம் ... தனி அறையில் நடந்த கொடூரம்.
07 Aug,2023
அத்தையுடன் மருமகனுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலால் இருவரும் ஊரைவிட்டே ஓடியதுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அத்தையை மருமகன் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
.
அத்தையுடன் மருமகனுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலால் இருவரும் ஊரைவிட்டே ஓடியதுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அத்தையை மருமகன் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு தலைமறைவான மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
சமூகத்தில் கள்ளக்காதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கணவனோ மனைவியோ இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது அவர்கள் வேறு ஒருவரின் துணையை நாடுகின்றனர், அற்ப சுகத்திற்காக திருமண பந்தத்தை கேள்விக்குறியாக்கும் அவர்கள் கடைசியில் கொலை தற்கொலை போன்ற துயர முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
.
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் ரஞ்சன் இவருக்கு தனது அத்தையான பூஜா சிங்வுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார், பின்னர் அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது, பின்னர் கிரேட்டர் நொய்டாவுக்கு வந்த அவர்கள் அங்கு செக்டார் காமாவில் வீடு வாடகை எடுத்து தங்கினார், இருவரும் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்தனர், இந்நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது, இந்நிலையில் ஆஷிஷ் ரஞ்சன் அத்தை பூஜாசிங்கை கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டிவைத்துவிட்டு தப்பினார்.
இதனையடுத்து வீட்டின் இரண்டாவது மாடியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்ததில் சாக்கு முட்டையில் பெண் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் பிகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது உறவினரான ஆசிஷ் ரஞ்சனுடன் திருமணம் செய்து கொண்டதும் ஆஷிஷ் ரஞ்சனுக்கு அந்தப்பெண் அத்தை என்பதும் தெரியவந்தது.
.
இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில், இதில் ஆஷிஷ் ரஞ்சன் பூஜா சிங் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அத்தை பூஜாவை ஆஷிஷ் ரஞ்சன் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் வீட்டு உரிமையாளர் அவ்னீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆசிஷ் ரஞ்சன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் அவ்னீஷ் கூறுகையில், ஆஷிஷ்க்கு புதிய வேலை கிடைத்திருப்பதாக பூஜா தன்னிடம் கூறியதுடன், 10 ஆம் தேதி வீட்டை காலி செய்ய போவதாகவும் கூறியிருந்தார். அதற்குள் அவர் இப்படி படுகொலை செய்யப்பட்டு உள்ளார், ஆஷிஷ் பூஜாவை கொன்றுவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்றும் அவ்னீஷ் கூறினார்.