...
கொலம்பியாவில் கண்களில் ரத்தம் கசியும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கொலம்பியாவில் கண்களில் ரத்தம் கசியும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்
முதலில் மூக்கு, கண்கள் ஆகியவற்றில் இருந்து ரத்தம் கசிய தொடங்கிய நிலையில், பிறகு வாயில் இருந்தும் கூட ரத்தக்கசிவு ஏற்படத் தொடங்கியது.
உலகெங்கிலும் ஏதேனும் மோசமான நிகழ்வுகள் நடக்கின்றபோது, அங்குள்ள கடவுள் சிலைகளின் கண்களில் இருந்து ரத்தம் வடிவதாக உவமையுடன் கூறுவோர் உண்டு. அதேபோல தனிநபர்களும் கூட ஆற்றாமையை அல்லது கோபத்தை வெளிப்படுத்தும்போது என் கண்களில் ரத்தம் வடிகிறது என்று குறிப்பிடுவதும் உண்டு.
ஆனால், கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண்ணின் கண்களில் இருந்து உண்மையாகவே ரத்தம் வடிகிறது. 17 வயதான ஜாரிக் ரமிரேஸ் என்னும் பெண் மிகவும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய கண்களில் இருந்து அவ்வபோது ரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் இது பிறவிக் குறைபாடு கிடையாது. இடைப்பட்ட நாளில் வந்த துயரம் தான்.
முன்னதாக, ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் முடக்கிப் போட்ட 2020ஆம் ஆண்டில், மக்கள் பல விதமான சிக்கல்களுக்கு ஆளாகியிருந்தனர். ஆனால், ஜாரிக் ரமிரேஸின் வாழ்க்கையில் கொரோனா அல்லாமல் வேறொரு கொடிய நோய் அந்த சமயத்தில் தாக்க தொடங்கி இருந்தது. முதலில் உடலில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியது.
முதலில் மூக்கு, கண்கள் ஆகியவற்றில் இருந்து ரத்தம் கசிய தொடங்கிய நிலையில், பிறகு வாயில் இருந்தும் கூட ரத்தக்கசிவு ஏற்படத் தொடங்கியது. தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மருத்துவ நிபுணர்களிடமும் இதற்காக அந்தப் பெண் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால், நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த அரிய நோய்க்கு பெயர் விகாரியஸ் மென்சுரேஷன் என்று நோய் சிகிச்சை நிபுணர் லூயிஸ் எஸ்காஃப் தெரிவிக்கிறார்.
பெண்களின் மாதவிலக்கு தொடர்புடைய எண்டோமெட்ரியல் திசுவானது, எண்டோமெட்ரியம் பகுதியை தாண்டி உடலின் வேறு பகுதியிலும் வளர்ந்திருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கசிவு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். மாதவிலக்கு சுழற்சியின்போது கர்ப்பப்பை பகுதியில் இருந்து உதிரப்போக்கு ஏற்படுவதைப் போலவே, எண்டோமெட்ரியம் திசுக்கள் பரவியிருக்கின்ற உடலின் மற்ற பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படுகிறது என்று லூயிஸ் கூறினார்.
இதுபோன்ற பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் பெண்ணுறுப்பு பகுதி மட்டுமல்லாமல் மூக்கு, காது, மார்பு, அக்குள், வயிறு, கால்கள் மற்றும் மூளையில் இருந்தும் கூட ரத்தக் கசிவு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தப் பிரச்சினை தனக்கு இருக்கின்ற போதும் எந்தவொரு மருத்துவராலும் இதற்கு தீர்வு அளிக்க இயலவில்லை என்று ஜாரிக் ரமிரேஸ் என்ற அந்த இளம்பெண் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். இந்தப் பெண்ணை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் தோழிகள் உள்பட பலரும் மனரீதியாக ஆதரவு அளிப்பது கிடையாதாம்.
எல்லோருமே இதை தனக்கு தேவையற்ற பிரச்சினை என்று கடந்து செல்கின்றனராம். இதில் உச்சகட்ட கொடுமையாக, வினோத நோய் இருப்பதால் கல்வியை கைவிடுமாறு இந்தப் பெண்ணிடம் அவரது ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.