பாதாள அறையில் சிறை.. 1000 முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமை...
04 Aug,2023
விளாடிமிர் செஸ்கிடோவிளாடிமிர் செஸ்கிடோ
கைது செய்யப்பட்ட செஸ்கிடோவிடம் இருந்து பல்வேறு பாலியல் விளையாட்டு பொம்மைகள், விலங்குகள், பாலியல் காட்சிகள் நிறைந்த சிடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இளம் பெண் ஒருவரை 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து பாலியல் தொடர்பான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவின் செல்யாபிஸ்க் பகுதியை சேர்ந்தவர் விளாடிமிர் செஸ்கிடோ. 51 வயதாகும் இவர் 2009 ஆம் ஆண்டு பதின்ம வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளார்.
ரகசிய இடத்தில் அவரை சிறை வைத்த விளாடிமிர் செஸ்கிடோ அந்த பெண்ணுடன் 1000 முறைக்கும் அதிகமாக உடலுறவு வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று மற்றொரு பெண்ணை 2011 இல் கொலை செய்ததாக செஸ்கிடோ மீது புகார் எழுந்தது. இதற்கிடையே செஸ்கிடோவின் பிடியில் இருந்து தப்பிய எகாடெரினா என்ற அந்தப்பெண் போலீசில் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் செஸ்கிடோவை கைது செய்துள்ளார்கள். எகாடெரினா தப்பிச் செல்வதற்கு செஸ்கிடோவின் தாயார்தான் உதவி செய்துள்ளார். சிறிய தவறுகளுக்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாக செஸ்கிடோ மீது எகாடெரினா குற்றம் சாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட செஸ்கிடோவிடம் இருந்து பல்வேறு பாலியல் விளையாட்டு பொம்மைகள், விலங்குகள், பாலியல் காட்சிகள் நிறைந்த சிடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே செஸ்கிடோ தனது வீட்டின் பாதாள அறையில் எகாடெரினாவை சிறை வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
2009 ஆண்டு எகாடெரினாவுக்கு 19 வயது இருக்கும்போது அவரும் செஸ்கிடோவும் சந்தித்துள்ளார்கள். அப்போது மது அருந்த எகாடெரினாவை அழைத்த செஸ்கிடோ அவரை சிறைப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளால் எகாடெரினாவின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.