90'ஸ் கிட்ஸ்களுக்கு உடலுறவு மீதான நாட்டம் குறைகிறதா...? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி
02 Aug,2023
செக்ஸ் டாய்ஸ் எனப்படும் தனிப்பட்ட பாலியல் வேட்கையை தீர்க்க பயன்படும் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் தங்கள் துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தின. இந்த ஆய்வுகள் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டன. உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில், குறிப்பாக 1980 ஆம் ஆண்டிற்கும்-1990களுக்கும் இடையே பிறந்த தலைமுறையினருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைந்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
அந்த காலகட்டத்தில் பிறந்த தம்பதியருள் 26 சதவீதத்தினர் பாலுறவில் நாட்டமின்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல் 1965 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்த தம்பதியருள் 21 சதவீதம் பேருக்கும், 2010க்கு முன்பு பிறந்த தம்பதிகளில் 10.5 சதவீதம் பேருக்கும் பாலியல் ஆர்வம் குறைந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
குறிப்பாக 1980, 90 களில் பிறந்தவா்களில் பலா் பெயரளவில் மட்டுமே தங்கள் இணையுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகக் கூறியிருந்தனர். பாலியல் உறவின் மீதான இந்த ஆர்வக் குறைவு, அவர்களை பாலியல் பந்தமற்ற தம்பதியராக மாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டன. இந்த ஆர்வக்குறைவுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சிலர், பாலியல் உறவை வலி நிறைந்ததாகவும், கடினமானதாகவும் கருதியது தெரியவந்தது. இதேபோன்று, தம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக் கொள்ளாததும் பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைய முக்கிய காரணமாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், 90'ஸ் கிட்ஸ்களுள் பணிச்சுமை அதிகம் காரணமாகவும், புதிதாக குழந்தை பெற்ற தம்பதியரும் பாலியல் உறவில் நாட்டம் குறைந்து காணப்பட்டதும் தெரியவந்தது.
1980-90களில் வேலைக்கு சோ்ந்த பலர் பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் தங்கள் பணிகளை தொடங்கியிருப்பாா்கள். அதனால் அவா்கள் பணிச் சுமைக்கும் மன அழுத்ததிற்கும் ஆளாகி இல்லற வாழ்வின் மீதான நாட்டத்தை இழந்திருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இதே போல் கொரோனா மற்றும் சமூக ஊடகங்களும் உறவில் சிக்கலை ஏற்படுத்துவதாக கூறும் ஆய்வாளா்கள்.
இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் இளம் தம்பதியர் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும்
உடனே உளவியல் ஆலோசகரையோ, தங்களையோ அணுக வேண்டும் என்றும் பாலியல் சிகிச்சை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.