வைரஸ்.. மீண்டும் உயிர்க்கும் அபாயம் !
28 Jul,2023
கொரோனா வைரசை விடவும், மிக மிக ஆபத்தான வைரசுகள் ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக்கா பகுதியில் கடும் பனியில் புதைந்து கிடக்கிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் அவை புதைந்த நிலையில் தான் இருக்கிறது. ஆனால் அவை தற்போது உயிர்த்து எழும் நிலை தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உலகையே அதிரவைத்துள்ளார்கள். அவை எப்படி மீண்டும் உயிர்க்கும் ?
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த விண் கற்களில் உள்ள உயிரினங்கள் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து உலகில் பல்வேறு உயிரினங்களாக உருவாறியது என்பது நாம் அறிந்த விடையம். அது போல லட்சக் கணக்கான விதம் விதமான பற்றீரியாக்கள், வைரஸ் மற்றும் பங்கஸ் போன்ற ஆபத்தான நுன் உயிரிகளும் பூமியில் வந்து விழுந்தது. குளிர் தேசத்தில் விழுந்த இந்த ஆபத்தான் நுன் உயிரிகள். இது நாள் வரை உறைந்தே கிடந்தது. தற்போது பூமி, மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
இதனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் உறை நிலையில் இருந்த பாறைகள் கூட உருக ஆரம்பித்துள்ளது. இன் நிலையில் அங்கே புதைந்து கிடக்கும் இது போன்ற ஆபத்தான வைரசுகள், மேலே வந்தால் அங்கே உள்ள நீரை பறவைகள் பருகினாலே போதும். அந்தப் பறவை அல்லது விலங்குகள் ஊடாக அது மனிதர்களையும் தாக்கும். கொரோனா வைரஸ் போல பல நூறு விதமான கொடிய வைரசுகள் அங்கே புதைந்து உறை நிலையில் உள்ளது.
ஆனால் இவை தற்போது வெளிப்படும் நிலை வந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.எனவே இனி வரும் காலங்களில் பெரிய சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்