திருட்டுக்கள் பல விதம். அதில் சில நிகழ்வுகள் ருசிகரமானதாகவும், நகைச்சுவை கொண்டதாகவும் மாறி விடுவது உண்டு. அப்படியொரு செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருட்டுக்கள் பல விதம். அதில் சில நிகழ்வுகள் ருசிகரமானதாகவும், நகைச்சுவை கொண்டதாகவும் மாறி விடுவது உண்டு. அப்படியொரு செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரிட்டனை சேர்ந்த 32 வயதான ஜாபி புல் என்ற நபர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல கேட்பரி சாக்லேட் நிறுவனத்திற்குள் புகுந்து 2 லட்சம் சாக்லேட் முட்டைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. திருடப்பட்ட சாக்லேட் முட்டைகளின் மதிப்பு 4 லட்சம் டாலர்கள் ஆகும். (இந்திய மதிப்பில் ரூ.32,79,220 ஆகும்).
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 220 மில்லியன் சாக்லேட் முட்டைகளை கேட்பரி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முட்டை போலவே வெள்ளை மற்றும் மஞ்சள் நிற க்ரீம்களில் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட் தித்திப்பு சுவை கொண்டதாக இருக்குமாம்.
ஈஸ்டர் பண்டிகை காலத்தில் இந்த சுவை மிகுந்த சாக்லேட் முட்டைகளை கேட்பரி நிறுவனம் சிறப்பு விற்பனை செய்யும் என்று சிஎன்என் செய்தி ஊடகம் தெரிவித்துருக்கறது.
திருட்டு தொடர்பாக ஸ்ட்ரீவ்ஸ் பிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சம்பவத்தின் போது கேட்பரி நிறுவன சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாகவும் கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஜாபி புல் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 1.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார்.
நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, “இந்த திருட்டு ஏதேச்சையாக நடந்தது அல்ல. ஒரு லாரி நிறைய க்ரீம் முட்டைகள் லோடிங் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, ஜாபி திட்டமிட்டு திருடியுள்ளார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக விசாரணையின்போது, காவல்துறை துரத்திய நிலையில் ஜாபி புல் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
டிவிட்டரில் இந்த வழக்கு தொடர்பாக நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகிறது . டிவிட்டர் பயனாளர் ஒருவர் வெளியிடப்பட்ட பதிவில், “நல்ல வேளையாக க்ரீம் முட்டைகளை நமது அதிகாரிகள் பத்திரமாக மீட்டதன் மூலமாக ஈஸ்டர் பண்டிகை குதூகலமாக கொண்டாடப்பட்டது" என்று நகைச்சுவையாக தெரிவித்தனர்.
பிரபல நிறுவனத்தில் பலகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை தாண்டி லாவகமாக திருடி வந்த ஜாபிக்கு விருது கொடுத்திருக்க வேண்டும் என்று மற்றொரு நபர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்