பெருங்கடல் மறையும்.. புது கண்டம் உருவாகும்.. ஷாக் கொடுத்த ஆய்வாளர்கள்!
25 Jul,2023
புதிய கண்டம் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புதிய கண்டம் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
New Continent | ஆனால் சில விஞ்ஞானிகள் இந்த கண்ட நகர்வின் போது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மறைந்து போகும் என்று தெரிவிக்கின்றனர்.
நாம் வாழும் பூமியின் தோற்றம் குறித்து இதுவரை தோராயமாகத் தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். பூமியின் உண்மையான வயது என்ன என்பதை இதுவரை யாரும் கூறவில்லை. இப்படி ஆதியும் அந்தமும் அறியாத பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பூமி தோன்றியதில் இருந்து எத்தனையோ மாற்றங்களை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல மாற்றங்களுக்குப் பிறகு இருக்கும் நிலத்திலும் நீரிலும் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவாவது நிரந்தரமா என்றால் அதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் இந்த பூமி தன்னை மாற்றங்களால் புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அதாவது இப்போதிருக்கும் கண்டங்கள் என்று அழைக்கப்படும் நிலப்பகுதி ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படியான நில நகர்வுகளால் வரும் காலத்தில் இப்போதிருக்கும் கண்டங்கள் காணமால் போகலாம் எனவும் புதிய கண்டங்கள் உருவாகலாம் எனவும் புவி அறிவியல் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் ரோஸ் மிட்செல் என்ற விஞ்ஞானி கணித்திருப்பது தான் அமாசியா என்ற சூப்பர் கண்டத்தின் தோற்றம். இது தொடர்பாக மிட்செல்ல் தி நெக்ஸ்ட் சூப்பர் காண்டினென்ட் என்ற தனது புத்தகத்தில் அவர் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.
பூமியின் மாற்றங்கள் குறித்து நமக்கு புரியவைப்பதற்காக பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவற்றை மைக்கேல் தனது புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். அதாவது 300 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஆப்பரிக்காவை மையமாக கொண்ட டைனோசர்கள் உலகமான பாஞ்சியா என்ற கண்டம் இருந்துள்ளதாகவும், அதன்பிறகு ரோடினியா, கொலம்பியா என பல கண்டங்கள் உருவானதையும் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மிட்செல.
இவை எல்லாம் கண்ட நகர்வுகளால் பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள். மேலும் இனி வரும் காலத்திலும் இப்படிப்பட்ட புதிய கண்டங்கள் தோன்றும் என்கிறார் ரோஸ் மிட்செல். இந்த நகர்வுகள் எதனால் நடைபெறுகின்றன என்ற கேள்விக்கும் இந்த புத்தகத்தில் பதில் தரப்பட்டிருக்கிறது . புவியின் மேண்டில் என்ற அடுக்கில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பால் குளிர்ந்த பகுதியை நோக்கி நிலப்பரப்பு நகர்கிறது. இது தான் அடிப்படையில் கண்ட நகர்வுகளுக்கும், புதிய கண்டங்கள் உருவாவதற்கும் காரணமாக அமைகிறது.
இதன் அடிப்படையில், வரும் காலத்தில் தற்போதைய வட அமெரிக்காவும் ஆசியாவும் இணையும் என்றும், அப்படி இணைந்து புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். அந்த புதிய சூப்பர் கண்டத்திற்குத் தான் விஞ்ஞானிகள் அமாசிய எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அப்படி அமாசிய கண்டம் உருவாகும் போது ஆர்க்டிக் பெருங்கடல் மறைந்து போகும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
ஆனால் சில விஞ்ஞானிகள் இந்த கண்ட நகர்வின் போது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மறைந்து போகும் என்று வேறு விதமான கணிப்பை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.