.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்தின் போது சந்தித்த அடையாளம் தெரியாத நபரை கண்டறிய சமூக வலைதளம் வாயிலாக தேட தொடங்கினார். இறுதியில் அந்த பெண்ணுக்கு கிடைத்த ருசிகரமான பதில் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மைகா ரென்னி என்ற அமெரிக்க பெண் அண்மையில் தனியாக சுற்றுலா சென்றிருந்தார். மியாமியில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை இந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
அப்போது, மைகா ரென்னி மது அருந்தி இருந்தார். இந்நிலையில் இருவரும் உரையாடியதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் இருவரும் பிரியும் போது, அந்த நபர் இந்த பெண்ணிடம் தன்னுடைய ஃபோன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், மது போதையில் தெளிவான மனநிலையில் இல்லாமல் இருந்த மைகா ரென்னி, அந்த நபர் சொன்ன ஃபோன் நம்பரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பின்னர், அதே நபரை மீண்டும் சந்திக்க விரும்பிய நிலையில், இருவரும் கடற்கரையில் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
.
அந்த வீடியோவில் தன்னை கடற்கரையில் சந்தித்த அந்த நபரை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அந்த நபருக்கு திருமணம் ஆகியிருக்காது என்று தான் நம்புவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மைகா ரென்னியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபரின் மனைவி என்று கூறி மைகாவை, ஷேரி என்ற பெண் தொடர்பு கொண்டுள்ளார். கடற்கரையில் நீங்கள் கண்ட நபர் என்னுடைய கணவர்தான் என்று மைகாவிடம் ஷேரி தெரிவித்துள்ளார்.
மேலும், என் கணவரின் ஃபோன் நம்பரை நானே கொடுத்தாக என் கணவரிடம் சொல்லுங்கள் என்று என்று ஷேரி குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து, ஷேரியிடம் மைகா மன்னிப்பு கோரியுள்ளார்.
.
இதற்கு ஷேரி அளித்த பதிலில், “இது உங்கள் தவறு இல்லை. என் கணவர் எதைப்பற்றியும் கவலை கொள்ள மாட்டார். ஆனால், நானும் அப்படியே இருப்பேன் என்று நம்பிவிடாதீர்கள். ஆனால், கணவர் உடனான வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. இருட்டில் நடக்கின்ற அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்” என்று அவர் பதிலளித்திருந்தார்.
.
இதையடுத்து மீண்டும் சமூக வலைதளத்தில் மைகா ரென்னி வெளியிடப்பட்ட பதிவில், “அந்த நபருக்கு ஒரு மனைவி இருக்கிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் வீடியோ வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நபர் யாரென்று தெரிய வந்தால் ஃபோன் நம்பரை பரிமாறி தொடர்பில் இருக்கலாம் என்று நான் நினைத்திருந்தேன்” என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.