14 வயது சிறுவனுடன் .. 45 வயது பெண் தொழிலதிபர்உடலுறவு..
15 Jul,2023
14 வயது சிறுவனுடன் பல முறை உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் தொழில் அதிபருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. 45 வயதான அந்த பெண் தொழிலதிபர் 24 மணி நேரத்தில் பலமுறை அந்தச் சிறுவனுடன் உடலுறவு கொண்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
14 வயது சிறுவனுடன் பல முறை உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் தொழில் அதிபருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. 45 வயதான அந்த பெண் தொழிலதிபர் 24 மணி நேரத்தில் பலமுறை அந்தச் சிறுவனுடன் உடலுறவு கொண்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
முழு விபரம் பின்வருமாறு: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சவன்னா டெய்ஸி (45) இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் ஆவார். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர், detox smart cleans என்ற நிறுவனத்தின் அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி இவரை ஆஸ்திரேலிய போலீசார் பாலியல் குற்றத்திற்காக கைது செய்தனர். டெய்சி 14 வயது சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓராண்டாக அவர் சிறையில் இருந்து வருகிறார். மேலும் அவரது செல்போனை ஆராய்ந்தபோது இது தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவனை ஒரு முத்தம் மட்டுமே கொடுத்ததாகவும் தொழிலதிபர் டெய்சி தங்களிடம் கூறியதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவர் மீது புகார் கொடுத்த டேனியல் ரிச்சர்ட்சன் அந்தச் சிறுவனுடன் டெய்சி பலமுறை உடலுறவு கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ளார் டெய்ஸியின் வழக்கறிஞர் பெர்ரி டி டூசல் தனது கட்சிக்காரர் மீது இப்படி ஒரு அபாண்டமான பொய் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. தன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் எனது கட்சிக்காரர் டெய்சி மறுக்கிறார் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் டெய்ஸிக்கு ஜாமீன் வழங்க மாஜிஸ்ட்ரேட் மறுத்துள்ளார். அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கவலைக்குரியது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெய்சி மீதான விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதுவரை அவர் நீதிமன்ற காவலில் இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.