வெள்ளி கிரகத்தில் ஏலியன்? புதிய ஆராய்ச்சி முடிவால் பிரம்மிப்பில் விஞ்ஞானிகள்..
13 Jul,2023
சமீபத்தில் வீனஸில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று வீனஸ் கிரகத்தில் பாஸ்பீன் வாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் வீனஸில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று வீனஸ் கிரகத்தில் பாஸ்பீன் வாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பாஸ்பீன் வாயு, உயிரினங்களால் வெளியிடக்கூடிய வாயுவாகும். மேலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட, இந்த வாயு தற்போது ஆழமான பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் கார்டிஃப்பில் நடந்த ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டியின் நேஷனல் அஸ்ட்ரானமி (Royal Astronomical Society's National Astronomy) சந்திப்பின் போது கிரீவ்ஸ் என்ற விஞ்ஞானி இந்த வியப்பூட்டும் தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். செப்டம்பர் 2020-இல் விஞ்ஞானிகள் குழு ஒன்று, வீனஸ் கிரகத்தில் இருக்கக்கூடிய மேகங்களில் பாஸ்பீன் வாயு இருப்பதை கண்டுபிடித்தனர். இது உயிரினங்கள் வாழ்வதற்கான வலுவான ஒரு ஆதாரமாக திகழ்கிறது.
மேற்கொண்டு வீனஸ் வளிமண்டலத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு, கிரீவ்ஸ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் ஹவாயில் அமைந்துள்ள மௌனா கியா அப்சர்வேட்டரியில் வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் டெலஸ்கோப்பை பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியின் போது வீனஸ் கிரகத்தின் மேற்பகுதி மற்றும் நடுப்பகுதியில் அமைந்துள்ள மேகங்களை குறிப்பாக ஆய்வு செய்தனர்.
வீனஸ் கிரகத்தில் உள்ள வளிமண்டலத்தில் இருந்து இந்த பாஸ்பின் வாயு வெளிப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு யூகித்தது. ஆக்சிஜன் குறைவாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழலில் வாழும் நுண்ணுயிரிகள் பாஸ்பீன் வாயுவை வெளியிடுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பூமியை பொறுத்தவரை, ஹைட்ரஜன் குறைவாக இருக்கும் பொழுது பாஸ்பீன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்தே பாஸ்பீன் வாயு இருந்தால் அந்த இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். மூன்று வருடங்களுக்கு முன்பு பாஸ்பீன் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போது இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. எனினும், பாஸ்பீன் வாயு இருப்பதால் மட்டுமே அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறது என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வளிமண்டலத்தில் இருக்கும் பாஸ்பரஸ் பாறைகள் மீது நீரானது வினைபுரிந்து பாஸ்பீன் வாயுவை உற்பத்தி செய்து இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், வானத்தில் வெளிப்புற உதவி இல்லாமல் பாறைகளை கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லாத ஒரு காரியம் என்பதால் இந்த கருதுகோளை கைவிட்டனர். ஆயினும், பாஸ்பீன் வாயு இருப்பது வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஒரு வலுவான ஆதாரமாக இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு உந்துக்கோளாக அமைந்துள்ளது. பூமியைத் தவிர பிற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான முதல் குறிப்பு இதுதான்.