உங்கள் குழந்தையை தூங்க வைத்து விட்டு உங்கள் பார்ட்னருடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் தூங்கிவிட்டதாக நினைத்த குழந்தை திடீரென்று உங்கள் படுக்கையறையில் நின்று கொண்டிருக்கிறது. நீங்களோ உங்கள் பார்ட்னருடன் அந்தரங்கமான உறவில் ஈடுபட்டுள்ளீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்? அதற்கான சிம்பிள் டிப்ஸ், இதோ.
முதலில், செய்ய வேண்டியது என்ன..?
உங்கள் குழந்தை நீங்கள் அந்தரங்கமாக இருக்கும் போது உங்களை பார்த்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கும் முன், இனி அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் அறை தாழிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்களையும் உங்கள் குழந்தையும் பாதுகாக்கும் ஒரு வழிமுறை. உடலுறவு கொள்ளும் போது நம்மையே அறியாமல் சில சப்தங்களும் நம்மிடம் இருந்து எழும். எனவே, அதை தவிர்க்க நீங்கள் உங்கள் பார்ட்னருடன் ‘அப்படி’ இருக்கும் சமயத்தில் ஏதாவது பாட்டை போட்டுவிடுங்கள், அல்லது தொலைக்காட்சியை போட்டுவிடுங்கள். இது, அந்த சப்தம் உங்கள் குழந்தையின் காதுகளுக்கு எட்டாமல் தடுத்துவிடும். சரி, இனி உங்கள் குழந்தை உங்களை அந்தரங்கமாக இருக்கும் போது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பார்போம்.
உடனடியாக நிறுத்துங்கள்..!
அந்தரங்கமாக இருக்கும் போது உங்கள் குழந்தை அறைக்குள் வந்துவிட்டாலோ அல்லது உங்கள் குழந்தை இருப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டாலோ உடனடியாக நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே நிறுத்திவிடுங்கள். உங்கள் குழந்தைய கண்ணோடு கண் பார்க்காதீர்கள்.
அமைதியாக இருப்பது முக்கியம்..
குழந்தை அப்படி உங்களை பார்த்தவுடன் கோபப்பட வேண்டாம். பல பெற்றோர்கள் இதற்கு அப்படியே எதிர்மறையாகத்தான் செய்வார்கள். அதனால், அப்படியொன்று நடிக்கும் போது நீங்கள் குழந்தையை பார்த்தவுடன் அமைதியாக இருப்பது அவசியம். குழந்தைகள் இயல்பிலேயே மிகவும் ஆர்வமிகுதியாக இருப்பார்கள். அதனால், அவர்கள் அப்படிப்பட்ட விஷயங்களை பார்ப்பதும் சகஜம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொறுமையாக இந்த விஷயத்தை கையாளுங்கள்.
குழந்தையிடம் பேசுங்கள்..
அந்த சம்பவம் நடைப்பெற்றவுடன் உங்கள் குழந்தையுடன் பேசுவது மிகவும் முக்கியம். 10 வயதிற்கு உட்பட்ட அல்லது மிகவும் குறைவான வயதில் இருக்கும் குழந்தைகளிடம் அணுகும் விதத்தை மாற்றலாம். நீங்கள் அந்தரங்கமாக இருந்த விஷயத்தை அவர்களிடம், “கட்டிப்பிடித்து கொண்டிருந்தோம்” என கூறலாம். புரிந்து கொள்ளும் வயதில் இருக்கும் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு உடலுறவு குறித்த புரிதலை உருவாக்கலாம்.
மேலும், குழந்தைகள் அதைப்பார்த்தவுடன் அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். மிகவும் சின்ன வயது நிறைந்த குழந்தைகளாக இருந்தால், பயந்து போயிருப்பார்கள். அது பயப்பட கூடிய விஷயம் இல்லை என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள். இனி இது போன்ற எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.