இனி இந்த 3 ராசிகளின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்
10 Jul,2023
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பலவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் 17ஆம் தேதி வக்ரமடைந்து நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தியடைகிறார். நவ கிரகங்களில் சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனிபகவான் சில மாதங்கள் வக்ரமடைந்தார். இது மூன்று ராசிக்காரர்களும் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம். அந்த ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்துக்கொள்வோம்.
சனி பகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ஆம் இடத்திற்கு சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். கும்ப ராசியில் தற்போது உள்ள சனிபகவான் சூரியனுக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் ப்ராப்ளம் ஏற்படுத்துவார் என்று பார்ப்போம்.
மகர ராசி: சனி வக்ர பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், வேலையுடன் உடற்பயிற்சியிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பற்களை கவனித்துக் கொள்ள வேண்டும். முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம், நீண்ட நாட்களாக கண்களை பரிசோதிக்காமல், கண்ணாடி அணியாமல் இருந்தால், இப்போது ஒருமுறை கண்களை சரி பார்க்கவும்.