பாட்னா: இரவு நேரத்தில் வீட்டில் ஆண் நண்பருடன் இருந்த மனைவியை கையும் களவுமாக பக்கத்து வீட்டினர் பிடித்த நிலையில், நேராக அழைத்து சென்று திருமணம் செய்து வைத்துள்ளார் அந்த பெண்ணின் கணவர்.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில், ஆணோ அல்லது பெண்ணோ, தன் துணைக்கு தெரியாமல் இன்னொருவருடன் கள்ளக்காதலில் இறங்கி விடுகிறார். அவர்கள் எதனால் கள்ளக்காதலில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் பாலியல் உறவுக்காகவே பெரும்பாலும் ஒன்று சேர்கிறார்கள். தனது துணை தன்னை திருப்தி படுத்தாத போது, அல்லது தனது துணை தன்னை புரிந்து கொள்ளாமல் வெறுப்பு வளர்க்கும் போது, அல்லது துணையைவிட வசதியான அல்லது அழகாக புதிதாக ஒருவர் வரும் போது ஏற்படும் ஈர்ப்பு போன்ற காரணங்களால் கள்ளக்காதல் ஏற்படுகிறது.
பொதுவாக கணவனை அல்லது மனைவியை விவகாரத்து செய்யாமல் தொடர்ந்து நடக்கும் இந்த கள்ளக்காதல் சமுதாயத்தில் மிக மோசமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு விஷயத்தை தனது துணை செய்வதை ஆணோ, பெண்ணோ கண்டுபிடித்தால் பெரிய பூகம்பமே குடும்பத்தில் வெடிக்கும்.
பொதுவாக இதுவரை கள்ளக்காதல்கள் சமுதாயத்தில் கொலை அல்லது தற்கொலையில் தான் முடியும்.
அபூர்வமாகவே ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிரிந்து விட்டு, விரும்பியவருடன் சேருவது நடக்கிறது. பணக்காரர்கள் வாழ்வில் இது அதிகம் பிரச்சனை ஆவது இல்லை.
அவர்கள் எளிதாக விவாகரத்து செய்து விரும்பியவர்களுடன் சேருகிறார்கள். ஆனால் ஏழை மற்றும் சாமானிய மக்கள் தங்கள் துணையை அந்த கோலத்தில் பார்த்தால் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்,
இந்நிலையில் அஞ்சுவது இல்லை. ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் வீட்டில் ஆண் நண்பருடன் இருந்த மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன் அவரை ஒன்றும் செய்யாமல், நேராக அழைத்து சென்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் ஒருவர் பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார்.
அருகில் பெண்ணின் கணவரும் உள்ளார். அந்த இளைஞருக்கு முகம், கை, கால்களில் காயம் காணப்படுகிறது.
காயத்துடனேயே அந்த இளைஞர், பெண்ணுக்கு குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். பலரும் அந்த நிகழ்வை மொபைலில் வீடியோ எடுக்க, அந்த பெண் முகத்தை காட்டாமல் திரும்பியபடியே நின்று அழுது கொண்டிருந்தார்.
கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்திருக்கிறார். இதை சாதகமாக்க விரும்பிய அந்த பெண் இரவு நேரத்தில் தனது ஆண் நண்பரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அடிக்கடி இதுபோல் நடந்துள்ளது. கடைசியாக நடந்த போது, இருவரையும் அக்கம் பக்கத்தினர் வசமாக பிடித்தனர். இருவரையும் சரமாரியாக அக்கம் பக்கத்தினர் கணவர் வரட்டும் என்று அங்கேயே இருவரையும் பிடித்து வைத்துள்ளனர்.
பின்னர் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணின் கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெளியூர் சென்றிருந்த கணவர் வீடு திரும்பி, சம்பவத்தை கேள்விப்பட்டு இருவரையும் தம்பதிகளாக மாற்றி விட்டு, அவர்கள் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டார். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளதாக தெரிகிறது.