ஸ்பெயின் ஸ்பெயின்: நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி
28 Jun,2023
ஏற்கனவே சட்டம் உள்ளது, ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் அமல்படுத்தவில்லை பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் மக்களை பாதுகாக்க வேண்டும் ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியம் கட்டலோனியா. இதன் தலைநகரமான பார்சிலோனா உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று. கட்டலோனியாவில் பொது நீச்சல் குளங்களில் பெண்களை மேலாடையின்றி செல்ல நகரம் மற்றும் நகர அரங்குகளுக்கு உத்தரவிட்டதையடுத்து கட்டலோனியாவில் ஆர்வலர்கள்
இதனை கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மேலாடையின்றி செல்ல 2020-ம் ஆண்டே கட்டலோனியா அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சில நகராட்சி நீச்சல் குளங்கள் இந்த நடைமுறையைத் தடுத்துள்ளன என ஒவ்வொரு கோடை காலத்திலும் பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடைகளை பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டும்."டவுன் ஹால்" எனப்படும் மக்கள் கூடும் நகர மண்டபங்களில் உள்ள நீச்சல் குளங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு பாலின சமத்துவப் பிரச்சினை. ஆண்கள் (மேலாடையின்றி) செல்லலாம், ஆனால் பெண்களால் முடியாது என்கிற நிலையிருக்கிறது. இதனை சரி செய்ய அவர்கள் (அதிகாரிகள்) ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
ஸ்பெயின் நாட்டில், நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல பெண்களுக்கான அனுமதி குறித்த விவாதங்கள், அந்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசுபொருள் ஆன செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.