10 வருடமாக 51 பேர் மனைவியை பலாத்காரம் செய்ய வைத்து வீடியோ எடுத்த கணவர்!
23 Jun,2023
போலீசார் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாதாகக் கூறுகின்றனர். குற்றவாளிகளில் பலரையும் தேடி வருவதாகவும் சொல்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் ஒருவர் தன் மனைவிக்கு தினமும் இரவில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பல ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கொடுமை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது.
இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறுகின்றனர். 26 முதல் 73 வயது வரை உள்ள 51 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்னும் பலரையும் தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
கைதான குற்றவாளிகளில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கியில் ஊழியர், சிறைக் காவலர், செவிலியர், பத்திரிகையாளர் போன்றவர்களும் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டொமினிக் பி தினமும் இரவில் மனைவியின் உணவில் லோராசெபம் என்ற மருந்தைக் கலந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
மனைவி சாப்பிட்டுவிட்டுத் தூங்கும்போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ய வெவ்வேறு நபர்களை வரழவைத்துள்ளார். வந்த நபர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வதை டொமினிக் வீடியோவாகவும் பதிவுசெய்து வந்திருக்கிறார். அந்த வீடியோக்களை ஒரு பென்டிரைவில் ABUSES என்ற பெயரில் ஒரு தொகுப்பாக சேமித்து வைத்திருக்கிறார் என போலீசார் சொல்கின்றனர்.
2011 முதல் 2020 வரை இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான ஆண்கள் பல முறை இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். டொமினிக் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
மயக்க நிலையில் இருக்கும் மனைவி விழித்துவிடாமல் இருக்க, புகையிலை, வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது; அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க வாகனங்களை தூரத்தில் நிறுத்திவிட்டு மறைவாக வீட்டிற்குள் வரவேண்டும் கூட்டிவந்தவர்களுக்கு பல கண்டிஷன்களையும் போட்டிருக்கிறார் டொமினிக்.
கைதானவர்களில் சிலர் அவருடைய மனைவிக்கு சம்மதம் இல்லை என்று தங்களுக்குத் தெரியாது என்றும் போலீசாரிடம் கூறியுள்ளனர். சிலர் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யவே இல்லை என்று மறுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இந்த விவகாரம் காவல்துறைக்குத் தெரியவந்தது. அதற்குப் பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் கணவரின் செயல் பற்றி தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற முடிவு செய்தார்.