அதீத போதையில் இருந்த இளம்பெண்ணை வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம்..
19 Jun,2023
இந்திய மாணவர் பிரீத் கைதுஇந்திய மாணவர் பிரீத் கைது
அதீத போதையில் இருந்த இளம்பெண்ணை இந்திய மாணவர் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிய அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் வசித்து வந்த இந்திய மாணவர் பிரீத் விகல், கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி அன்று இரவு அருகே உள்ள கிளப்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு இளம்பெண்ணும் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்காக கிளப்பிற்கு வந்துள்ளார்.
அங்கு அவர்கள் மது போதை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பார்ட்டி முடிந்த நிலையில், வெளியே வந்த அந்த இளம்பெண்ணுக்கு அதீத போதை காரணமாக நினைவு சரியாக இல்லை. அரை மயக்க நிலையில் பெண் தள்ளாடிக்கொண்டிருந்துள்ளார். பெண்ணின் நிலையை உணர்ந்து கொண்ட இந்திய மாணவர் பிரீத், அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.
அதிகாலை வேளையில் சாலையில் தனியாக தள்ளாடி நடந்து கொண்டிருந்த பெண்ணுக்கு அருகே சென்று அவருக்கு தோள் கொடுத்து உதவுவது போல சென்று அப்படியே அவரை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து போதையில் நினைவற்று இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளார்.
விடிந்த பின் பெண்ணுக்கு நினைவு வந்த போது தான் வேறு ஒருவரின் படுக்கையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த பெண் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, பிரீத் போதையில் இருந்த இளம்பெண்ணை சாலையில் தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. அத்துடன் இளம்பெண் தனது படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார் பிரீத். இதுவும் விசாரணையில் அம்பலமானது.
சிசிடிவி ஆதாரங்கள், பெண்ணிடம் பிரீத் இன்ஸ்டாகிராமில் மேற்கொண்ட உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் நிருபணம் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பின் தன்னால் 6 மாதத்திற்கு இரவில் வெளியே செல்லவே தைரியம் வரவில்லை என்று அந்த பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பெண்ணின் தைரியமான அனுகுமுறை தான் குற்றவாளியை பிடிக்க முக்கிய காரணம் என போலீசார் விசாரணை குறித்து தெரிவித்துள்ளனர்.