வீட்டில் திருடுபோவதாக கனவு.. உறக்கத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர் கைது.
19 Jun,2023
தன்னைத் தானே சுட்டுக்கொண்ட மார்க் டிகாராதன்னைத் தானே சுட்டுக்கொண்ட மார்க் டிகாரா
அமெரிக்காவில் ஒரு நபர் கனவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. இதை தடுக்க பல விதமான கட்டுப்பாடுகளும் சட்டங்களும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஒரு வினோதமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அங்குள்ள இலியானிஸ் மாகாணத்தின் லேக் பாரிங்டன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டிகாரா. இவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது அவர் தெரிவித்த பதில் ஆதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
62 வயதான இவர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இவருக்கு கனவு வந்துள்ளது. அதில் தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து களவாடுவது போல கனவு கண்டுள்ளார். அந்த தூக்கத்திலேயே திருடர்களை தாக்குவதாக எண்ணி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது காலிலேயே சுட்டுக்கொண்டுள்ளார். குண்டு பாய்ந்து காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், வலியில் மார்க் திடுக்கிட்டு விழித்துள்ளார்.
காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்துதோடிய நிலையில் மார்க் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதற்குள்ளாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தனது கனவு குறித்து மார்க் கூறவே, அக்கம் பக்கத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவிந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மார்க் ஜூன் 12ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் 1.50 லட்சம் டாலர் பிணை தொகை செலுத்தி விடுதலையானார். வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக மார்க்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.